கம்பராமாயணம் 6175 · யுத்த 2.63

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1யானை இலர் தேர் புரவி யாதும் இலர்; ஏவும்
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாம் ஓர்
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்;
ஆனவரும் மானிடர் நம் ஆண்மை இனிது அன்றோ!

பொருள் · Meaning in Tamil

யானை இலர் - நமது பகைவர்களுக்கு யானைப்படை இல்லை; தேர் புரவி யாதும் இலர் - தேர்ப்படை, குதிரைப்படை மற்ற எதுவுமே இல்லை; ஏவும் தானை இலர் - நம்மீது எய்வதற்கேற்ற படை பலமும் இல்லை; நின்ற தவம் ஒன்றும் இலர் - நிலைபெற்ற தவபலமும் ஒன்றும் இல்லை; கூனல் முதுகின் - கூனி வளைந்த முதுகை உடைய; சிறு குரங்கு கொடு - அற்பமான குரங்குகளைத் துணையாகக் கொண்டு; வெல்வார் ஆனவரும் மானுடர் தாமோ? - நம்மை வெல்பவரும் இந்த மனிதர்கள் தாமோ? நம் ஆண்மை இனிது அன்றோ - அரக்கர்களாகிய நமது ஆண்மை நன்றாயிருக்கிறது. "இனிது அன்றே” குறிப்பு மொழியாக இகழத்தக்கது என்னும் பொருள் தந்து நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They have no elephants, chariots, horses or anything; they have no army
  2. to send against us; they have no austerity to stand on; are these,
  3. with little hunch-backed monkeys, the ones who will win?
  4. Are they men? How fine is our manhood, is it not!

What the poem says

Intiracittu mocks the enemy: no elephants, chariots, cavalry or real army, no ascetic power, only a band of little hunchbacked monkeys. If such men can defeat the demons, what is demon manhood worth? The last phrase is ironic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāṉai ilar tēr puravi yātum ilar; ēvum
tāṉai ilar niṉṟa tavam oṉṟum ilar tāmō
kūṉal mutukiṉ ciṟu kuraṅku koṭu velvār;
āṉavarum māṉuṭar nam āṇmai iṉitu aṉṟō!