கம்பராமாயணம் 6176 · யுத்த 2.64

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும்
பேர் உலகு யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே
யாரும் ஒழியாமல் நரர் வானரர்கள் என்பார்
வேரும் ஒழியாதவகை கொன்று அலது மீளேன்.

பொருள் · Meaning in Tamil

நெடிய காலும், நிமிர் வானும் - நீரும், நிலமும் நெடிது வீசும் காற்றும் நிமிர்ந்துயர்ந்த ஆகாயமும் ஆகிய பஞ்ச பூதங்களுடனே; பேர் உலகு யாவும் - மிகப் பெரிதான உலகங்கள் யாவையும்; ஒரு நாள் புடைபெயர்த்தே - ஒரே நாளில் நிலைமாற்றி, யாரும் ஒழியாமை - எவரும் தப்பி விடாதபடி; நரர் வானரரை எல்லாம் - மனிதர்கள் குரங்குகள் எல்லாவற்றையும்; வேரும் ஒழியாத வகை - வேரும் கூட தப்பி விடாதபடி; வென்று அலது மீளேன் - வென்று அல்லது மீண்டு வரமாட்டேன்;

நிமிர்தல்-உயர்தல். வேருடன்-அடியோடு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Water and land and the long wind and the soaring sky,
  2. and all the great worlds, I will overturn in one day,
  3. and leaving none at all, the men and the monkeys, all of them,
  4. I will conquer so that not even a root remains, or I will not return.

What the poem says

Intiracittu vows to shake the elements and all the worlds in a single day and to destroy every last man and monkey, root and all; he will not come back otherwise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīrum nilaṉum neṭiya kālum nimir vāṉum
pēr ulaku yāvum oru nāḷ puṭaipeyarttē
yārum oḻiyāmai narar vāṉararai ellām
vērum oḻiyātavakai veṉṟu alatu mīḷēṉ.