கம்பராமாயணம் 6177 · யுத்த 2.65

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று அடி இறைஞ்சினன் எழுந்து'விடை ஈமோ
வன் தொழிலினாய்'! எனலும் வாள் எயிறு வாயில்
தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம்
வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும்.

பொருள் · Meaning in Tamil

என்று அடி இறைஞ்சினன் - என்று கூறி இராவணனது பாதங்களில் வீழ்ந்து வணங்கிப்பின்; எழுந்து - எழுந்து நின்று; (இராவணனைப் பார்த்து) வன்திறலினாய் - மிக்க வலிமை உடைய எந்தையே! விடை ஈமோ - எனக்கு விடை தருக; எனலும் - என இந்திரசித்து கூறி நிற்க; நனி தீவினையை எல்லாம் - மிகுந்த தீவினைகள் அனைத்தையும்; வென்றவரின் நன்றுணரும் - தங்கள் தவ பலத்தாலே வென்ற முனிவர்களைவிடவும் நன்மையை உணர்ந்த; வீடணன் - வீடணன் என்னும் பெயருடையவனான இராவணனது தம்பி; வாள் எயிறு வாயில் தின்றனன் - பற்களால் உதட்டைக் கடித்தவனாக; முனிந்து - இந்திர சித்தைக் கோபித்து; விளம்பும் - பின்வருமாறு கூறலானான்; இறைஞ்சினன், நின்றனன் இவை முற்றெச்சங்கள். வன்திறம் - மிக்க வலிமை வாள் எயிறு - வெண்மையான பற்கள் தவத்தாலும் ஞானத்தாலும் தீவினைகளை வென்றுயர்ந்தவராகிய மேலோரினும் மெய்யுணர்வு படைத்தவன் வீடணன் என்பதை "நனி தீவினையை எல்லாம் வென்றவரின் நன்றுணரும் வீடணன்" என்றார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So saying, he bowed at his feet, rose and said, Give me leave,
  2. you of mighty strength! At that, biting his lip with his bright teeth,
  3. angered, Vīṭaṇaṉ, who knew the good better than those
  4. who have conquered all evil deeds, began to speak.

What the poem says

Intiracittu bows to his father and asks permission to go to war. At this Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's younger brother, wiser than sages who have overcome all sin, bites his lip in anger and begins to speak.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu aṭi iṟaiñciṉaṉ eḻuntu 'viṭai īmō
vaṉ tiṟaliṉāy'! eṉalum vāḷ eyiṟu vāyil
tiṉṟaṉaṉ muṉintu naṉi tīviṉaiyai ellām
veṉṟavariṉ naṉṟu uṇarum vīṭaṇaṉ viḷampum.