கம்பராமாயணம் 6178 · யுத்த 2.66

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினர்
போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோர்
காலம் மேல் விளைபொருள் உணரும் கற்பு இலாப்
பாலன் நீ இனையன பகரற் பாலையோ.

பொருள் · Meaning in Tamil

காலம் மேல் விளை பொருள் உணரும் - காலத்தையும் பின்னால் நிகழும் காரியத்தையும் உணர்கின்ற, கற்பு இலா பால! - அறிவற்ற சிறுவனே; நூலினால் - பல நூல்களையும் கற்ற நூலறிவினாலும், நுணங்கிய அறிவு - நுணங்கிய அறிவாற்றலும்; நோக்கினை போலும் - எதிர்காலத்தை நோக்கும் திறமுடையாய் போலும்; உறுபொருள் புகலும் பூட்சி யோய் - நேர இருப்பதைக் கூறும் மனஉறுதியுடன் பேசுகிறாய்; நீ இனையன பகர்தற் பாலையோ - நீ இத்தகையவைகளைப் பேசுதல் தகுமோ?

கற்பு-கற்றலினால் பெறும் அறிவு (கல்வியுமாம்) நூல்-நூலறிவு. நுணங்கிய- நுட்பமான. பூட்சி-மன உறுதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. It seems you have a mind made fine by books,
  2. you who boldly declare what is to come;
  3. you child, without the learning to know the time and what will follow,
  4. is it fit for you to say such things?

What the poem says

Vīṭaṇaṉ rebukes Intiracittu sarcastically: he speaks as though deep learning let him see the future, yet he is a mere boy without the knowledge to judge the moment or foresee consequences. Such talk is not fitting for him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūliṉāl nuṇaṅkiya aṟivu nōkkiṉai
pōlumāl uṟu poruḷ pukalum pūṭciyōy
kālam mēl viḷai poruḷ uṇarum kaṟpu ilāp
pāla nī iṉaiyaṉa pakaraṟpālaiyō.