கம்பராமாயணம் 6179 · யுத்த 2.67

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கருத்து இலான் கண் இலான் ஒருவன் கைக்கொடு
திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய்
விருத்த மேதகையவர் வினைய மந்திரத்து
இருத்தியோ? இளமையால் முறைமை எண்ணலாய்.

பொருள் · Meaning in Tamil

இளமையால் முறைமை எண்ணலாய் - இளமைப்பருவம் காரணமாக, அரசியல் முறையை எண்ணிப் பார்க்காதவனே! கருத்து இலான் - ஓவிய ஞானமில்லாதவனும்; கண் இலான் ஒருத்தன் - கண் பார்வை இல்லாதவனுமான ஒருவன்; சித்திரம் கைக்கொடு - ஓவியம் ஒன்றைக் கையிலே எடுத்துக் கொண்டு; திருத்துவான் அனைய - இதனை நன்கு திருத்தி அமைப்பேன் என்பது போல், செப்புவாய் - நீ பேசுகிறாய்; விருத்த மேதகையவர் - வயது முதிர்ந்த மேலான அறிஞரும்; வினைஞர் - சிறந்த வினையம் உடையவர்களும் இருக்கத் தகுந்த; மந்திரத்து இருத்தியோ - மந்திராலோசனை சபையில் நீ இருக்கத் தகுமோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a man without sense and without eyes who takes a painting in hand
  2. and offers to correct it, so you speak;
  3. in a council of aged worthies and men of skill
  4. do you sit? You who, in your youth, do not consider what is proper!

What the poem says

Vīṭaṇaṉ compares Intiracittu to a blind man ignorant of art who picks up a painting and proposes to improve it. A youth who does not grasp statecraft has no place in a council of elders and experts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karuttu ilāṉ kaṇ ilāṉ oruttaṉ kaikkoṭu
tiruttuvāṉ cittiram aṉaiya ceppuvāy
virutta mētakaiyavar viṉaiñar mantirattu
iruttiyō? iḷamaiyāl muṟaimai eṇṇalāy.