கம்பராமாயணம் 6181 · யுத்த 2.69

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அறம் துறந்து அமரரை வென்ற ஆண் தொழில்
திறம் தெரிந்திடின் அது தானும் செய்தவம்
நிறம் திறம்பாவகை இயற்றும் நீர்மையால்
மறம் துறந்தவர் தரும் வரத்தின் வன்மையால்.

பொருள் · Meaning in Tamil

அறம் துறந்து - நீ அறத்தை விட்டு விலகி; அமரரை வென்ற - தேவர்களை வென்ற; ஆண் தொழில் திறம் - வீரத் தொழிலின் திறத்தை; தெரிந்திடின் - ஆராய்ந்து பார்த்தால்; அதுதானும் - அதுவும் கூட; செய்தவம் நிறம் திறம்பாவகை - சிறந்த தவத்தை பெருமை மாறாத வகையிலே; இயற்றும் நீதியால் - செய்து முடித்த தன்மையால், மறம் துறந்து - கொடுமைக்குணம் விடுத்து; அவர் தரும் வரத்தின் வன்மையால் - அந்தத் தேவர்கள் தந்த வரத்தின் வலிமையினாலாம்.

ஆண்தொழில்-வீரச்செயல். திறம்புதல்-கெடுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If one looks into the manly valour by which, forsaking dharma, you conquered the immortals,
  2. even that came by the justice of having performed
  3. your austerities so that their worth never faltered,
  4. and by the strength of the boons they gave when you set cruelty aside.

What the poem says

Vīṭaṇaṉ reminds Irāvaṇaṉ that even his conquest of the gods, achieved in defiance of righteousness, was made possible only by the boons he earned through flawless austerities performed while he had put cruelty aside. His power rests on past virtue, not on wickedness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟam tuṟantu amararai veṉṟa āṇtoḻil
tiṟam terintiṭiṉ atutāṉum cey tavam
niṟam tiṟampāvakai iyaṟṟum nītiyāl
maṟam tuṟantu avar tarum varattiṉ vaṉmaiyāl.