கம்பராமாயணம் 6185 · யுத்த 2.73

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எந்தை நீ யாவும் நீ எம் முன் நீ தவம்
வந்தனைத் தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ
இந்திரப் பெரும்பதம் இழக்கின்றாய் என
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன்.

பொருள் · Meaning in Tamil

எந்தை நீ - எனக்குத் தந்தையும் நீயே; யாயும் நீ- தாயும் நீயே; எம் முன்நீ - எனக்கு மூத்த தமையனும் நீயே; தவ வந்தனைத் தெய்வம் நீ - தவத்தால் நான் வந்தித்து வணங்குதற்குரிய தெய்வமும் நீயே, மற்றும் முற்றும் நீ- வேறு எல்லாம் நீயே; இந்திரப் பெரும் பதம் - இந்திர பதவிக்கு நிகரான பெரிய அரசபதவியை; இழக்கின்றாய் என - இழக்கப் போகிறாயே என்று; நொந்தனென் ஆதலின் - மனம் வருந்தினேன் ஆதலால்; நுவல்வது ஆயினேன் - இவை சொல்லலானேன்.

எந்தை - எம் தந்தை. யாய்- தாய். எம்முன் - என்தமையன். இழக்கின்றாய் என்றது இழப்பாய் என்னும் பொருளில் வந்தது. உறுதி குறித்த காலவழுவமைதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You are my father, you are my mother, you are my elder brother, you are
  2. the god I worship in my austerities, you are all else and everything;
  3. because I grieved that you are losing
  4. a state as great as Intiraṉ's, I have come to speak.

What the poem says

Vīṭaṇaṉ declares his love for his brother: Irāvaṇaṉ is father, mother, elder brother and god to him. It is precisely because he is distressed that Irāvaṇaṉ is about to lose his godlike kingdom that he speaks. The present tense, you are losing, expresses certainty about the future.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1entai nī yāyum nī emmuṉ nī tava
vantaṉait teyvam nī maṟṟum muṟṟum nī
intirap perum patam iḻakkiṟāy eṉa
nontaṉeṉ ātaliṉ nuvalvatu āyiṉēṉ.