கம்பராமாயணம் 6187 · யுத்த 2.75

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?

பொருள் · Meaning in Tamil

கோநகர் முழுவதும் - நமது தலைநகரமாகிய இலங்கை நகர் முழுவதும்; நினது கொற்றமும் - உன்னுடைய வீர வெற்றியும்; சானகி எனும் பெயர் - சானகி என்ற பெயர் கொண்ட, உலகின் தம் அனை - உலகத்தின் தாயாகிய; ஆனவள் கற்பினால் - அந்தத்தேவியின் கற்பின் அனலால்; வெந்தது அல்லது - வெந்து ஒழிந்ததே அல்லாமல்; ஓர் வானரம் சுட்டது - ஒரு குரங்கு வந்து சுட்டது; என்று உணர்தல் மாட்சியோ - என்று நினைப்பது அறிவுடைமை ஆகுமோ?

கோநகர் - தலைநகரம். தம்மனை - தாய்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The whole royal city and your conquering glory
  2. were burned by the chastity of her named Jāṉaki,
  3. who is mother to the world; is it wisdom to believe
  4. that a monkey set them on fire?

What the poem says

Vīṭaṇaṉ says that Ilaṅkai and Irāvaṇaṉ's glory were not really burned by a monkey: they were consumed by the fire of the chastity of Cītai, called Jāṉaki, the mother of the world. It is folly to think otherwise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōnakar muḻuvatum niṉatu koṟṟamum
cāṉaki eṉum peyar ulakiṉ tammaṉai
āṉavaḷ kaṟpiṉāl ventatu allatu ōr
vāṉaram cuṭṭatu eṉṟu uṇartal māṭciyō?