கம்பராமாயணம் 6188 · யுத்த 2.76

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எண் பொருட்டு ஒன்றி நின்று, எவரும் எண்ணினால்
'விண் பொருட்டு ஒன்றிய உயர்வும் மீட்சியும்
பெண் பொருட்டு'அன்றியும், பிறிது உண்டாம் எனின்
மண் பொருட்டு, அன்றியும் வரவும் வல்லவோ?

பொருள் · Meaning in Tamil

எவரும் எண் பொருட்டு ஒன்றி நின்று - யாரும் எண்ணும் பொருட்டாக மனம் ஒன்றி நின்று; எண்ணினால் - சிந்தித்தால், விண் பொருட்டு ஒன்றிய உயர்வும் மீட்சியும் - வானளாவ வளர்ந்த உயர்வும் தாழ்வும்; பெண் பொருட்டு - பெண் காரணமாகவோ; அன்றியும் பிறிது உண்டாம் எனின் - அல்லது வேறு ஒரு காரணம் உண்டு என்றால்; மண் பொருட்டு - மண் காரணமாக உண்டாகும்; அன்றியும் வரவும் வல்லவோ - இவையல்லாது வேறு காரணத்தால் வரலாகுமோ? எண்- ஆய்வு. வல்லவோ- வல்லவையோ. ஒன்றிநின்று - ஒருமைப்பாட்டுடன் நின்று. மீட்சி-தாழ்வு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If anyone ponders with a mind fixed on reckoning,
  2. the rise that reaches the heavens and the fall
  3. come because of a woman; or, if there is any other cause,
  4. because of land; can they come in any other way?

What the poem says

Vīṭaṇaṉ offers a piece of political wisdom: when one reflects carefully, the great rises and falls of kings come about either because of a woman or because of land, and from nothing else. His warning is that Irāvaṇaṉ's desire for Cītai will be his ruin.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇporuṭṭu oṉṟi niṉṟu, evarum eṇṇiṉāl
'viṇporuṭṭu oṉṟiya uyarvu mīṭciyum
peṇporuṭṭu' aṉṟiyum, piṟitu uṇṭām eṉiṉ
maṇporuṭṭu, aṉṟiyum varavum vallavō?