கம்பராமாயணம் 6190 · யுத்த 2.78

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏறிய நெடுந்தவம் இழைத்த எல்லை நாள்
ஆறிய பெருங்குணத்து அறிவன் ஆணையால்
கூறிய மனிதர்பால் கொற்றம் கொள்ளலை;
வேறு இனி அவர் வயின் வென்றி ஆவதோ?

பொருள் · Meaning in Tamil

ஏறிய நெடுந்தவம் - நீ உயர்ந்த பெரிய தவத்தை; இழைத்த எல்லை நாள் - செய்த காலமாகிய அந்த நாள்; ஆறிய பெருங்குணத்து அறிவன் - அமைதியான சிறந்த குணத்தை உடைய பிரம தேவன்; ஆணையால் - கட்டளையினால், கூறிய மனிதர்பால் - கூறப்பட்ட மனிதர்களிடம்; கொற்றம் கொள்ளலை - வெற்றிக்கு வரம் கேட்டுப்பெற வில்லை; வேறு இனி அவர் வயின் - இனி அந்த மானிடர்கள் பால்; வென்றி ஆவதோ - வெற்றியடைய முடியுமோ?

ஆறிய - ஆன்றவிந்தடங்கிய. அறிவன் - கடவுளாகிய பிரமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On that day long ago when you performed your towering penance,
  2. you did not ask, of the calm and noble wise god's decree,
  3. for victory over the men he named.
  4. What victory can there now be for you over such as these?

What the poem says

When Irāvaṇaṉ won his boons from Brahmā, the creator, he asked for protection from gods and demons but scorned to mention men. Vīṭaṇaṉ points out that this left him with no shield against humans, so he cannot count on beating Irāmaṉ, a man.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṟiya neṭun tavam iḻaitta ellai nāḷ
āṟiya peruṅ kuṇattu aṟivaṉ āṇaiyāl
kūṟiya maṉitarpāl koṟṟam koḷḷalai;
vēṟu iṉi avarvayiṉ veṉṟi yāvatō?