கம்பராமாயணம் 6191 · யுத்த 2.79

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ?
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்துவாய்
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை
மேயினை ஆம் எனின் விளம்ப வேண்டுமோ?

பொருள் · Meaning in Tamil

ஏயது - (நீ மனிதரிடம் தோல்வி அடைய) நேர்ந்தது என்பதனை; பிறிது உணர்ந்து - வேறு காரணங்களை ஆராய்ந்துணர்ந்து; இயம்ப வேண்டுமோ - கூற வேண்டுமோ? நீ ஒரு தனி - நீ ஒப்பற்ற தனித்தலைவனாக (ஒருவனாக); உலகு ஏழும் நீந்தினாய் - ஏழுலகத்தையும் வென்றாய் (ஆனால்); ஆயிரம் தோளவற்கு - ஆயிரம் தோள்களை உடைய கார்த்த வீரியன் என்ற மானிட மன்னனுக்கு; தோற்றனை - தோற்று விட்டவனாய்; மேயினை ஆம்- ஆனாய் அல்லவா; இனி விளம்ப வேண்டுமோ - (மனிதருக்குத் தோற்பதை) இனிக் கூறவும் வேண்டுமோ?

ஏயது - நேர்ந்தது, பொருந்தியது. ஒருதனி - தன்னந்தனி. நீந்துதல் -கடத்தல் (இங்கு வெல்லுதல்). நீ மனிதர்களிடம் தோல்வி அடைவாய் என்பதற்கு கார்த்த வீரியனிடம் தோற்றதே சான்று என்பது குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Must we search for other reasons to explain what has befallen you?
  2. You, alone and unmatched, crossed and conquered all seven worlds,
  3. yet you were beaten by the strength of the thousand-armed one
  4. and became his captive. Need anything more be said?

What the poem says

The thousand-armed one is Kārttavīriyaṉ, a human king who once defeated and bound Irāvaṇaṉ. Vīṭaṇaṉ uses this as proof: the conqueror of seven worlds has already lost to a man, so the danger from men is not theoretical.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēyatu piṟitu uṇarntu iyampa vēṇṭumō?
nī oru taṉi ulaku ēḻum nīntiṉāy
āyiram tōḷavaṟku āṟṟal tōṟṟaṉai
mēyiṉai ām iṉi viḷampa vēṇṭumō?