கம்பராமாயணம் 6192 · யுத்த 2.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வரம்பில் ஆற்றலாய் - எல்லையில்லாத வல்லமை உடையவனே! மேல் உயர் கயிலையை - நீ, ஓங்கி, உயர்ந்த கைலாய மலையை; எடுத்த மேலை நாள் - பேர்த்து எடுத்த அந்த நாளிலே; நாலு தோள் நந்தி - நான்கு தோள்களை உடைய நந்தி தேவன்; தான் நவின்ற சாபத்தால் - தான் கூறிய சாபத்தினாலே; கூல வான் குரங்கினால் - வாலுள்ள பெரிய குரங்கினால், குறுகும் கோள் - தீங்கு நேரும்; அது வாலி பால் கண்டனம் - என்ற அதனை வாலியிடம் பார்த்தோமே.
கூலம் - வால். வான் - பெரிய. கோள் - தீமை. இராவணன் கைலாயத்தைப் பேர்த்து எடுக்க முற்பட்ட போது, நந்திதேவன் வந்து தடுக்க, அவரைக் குரங்கு போன்ற முகத்தை உடையவன் என இராவணன் பரிகசித்ததால் சினம் கொண்ட நந்தி தேவன் "குரங்குகளால் உனக்கு அழிவு நேரும்” எனச் சபித்தார் இந்தச் செய்தி உத்தரகாண்டத்தில் கூறப்பட்டுள்ளது. வாலியினிடம் இராவணன் தோற்றது, அச்சாபத்தை நிறைவேற்றிவிட்டது என்பதை நினைவுபடுத்தி வீடணன் இராவணனைத் தெருட்டுகிறான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Long ago, on the day you lifted lofty Kailāsa high,
- by the curse that four-armed Nanti spoke,
- harm would come to you from a great long-tailed monkey;
- that we have already seen with Vālī, O you of boundless might.
What the poem says
When Irāvaṇaṉ tried to uproot Mount Kailāsa, Śiva's gatekeeper Nanti stopped him, and Irāvaṇaṉ mocked his monkey-like face. Nanti cursed him that monkeys would bring his ruin. Irāvaṇaṉ's humiliating defeat by the monkey king Vālī was the first fulfilment, and Vīṭaṇaṉ warns him that Irāmaṉ's monkey army may complete it.