கம்பராமாயணம் 6193 · யுத்த 2.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தீயிடைக் குளித்த - நெருப்பிலே மூழ்கி உயிர்துறந்த; அத்தெய்வக் கற்பினாள் - அந்த தெய்வீகக் கற்புடைய வேதவதி; வாயிடை மொழிந்த சொல் - வாயால் கூறிய சாபமொழிகள்; மறுக்க வல்லமோ - மறுக்கும் வல்லமை உடையேமோ? உனக்கு நான் நோய் - 'நான் உனக்கு நோயாவேன்'; என நுவன்றுளாள் - என்று கூறியுள்ளாள்; அவள் ஆயவள் சீதை - அவளேதான் சீதை; பண்டு அமுதில் தோன்றினாள் - முன்பு பாற்கடலில் அமுதுடன் அவதரித்த இலக்குமியும் அவளே.
தவவாழ்வை மேற்கொண்டு, தனித்து வாழ்ந்த வேதவதியை இராவணன் திக்கு விஜயத்தின் போது பலாத்காரம் செய்ய, 'நான் உனக்கு நோயாவேன்' என்று கூறி யாகத் தீயில் விழுந்து உயிர்துறந்தாள். அந்த வேதவதியே சீதை; திருமகளின் அவதாரம். இந்த வரலாறு உத்தர காண்டத்தில் பேசப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She of divine chastity who plunged into the fire:
- can we gainsay the words her lips spoke?
- She declared, I shall be your affliction.
- That very woman is Cītai, who rose long ago with the nectar.
What the poem says
Vīṭaṇaṉ recalls Vētavati, an ascetic woman whom Irāvaṇaṉ assaulted during his conquests. Before throwing herself into a sacrificial fire she vowed to return as his doom. Vīṭaṇaṉ says she has been reborn as Cītai, who is also Lakṣmī, the goddess born with the nectar when the ocean of milk was churned.