கம்பராமாயணம் 6194 · யுத்த 2.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தசரதப் பெயரினான் ஒருவன் - தயரதன் என்னும் பெயருடைய ஒரு மன்னன்; நேமி இம்பரில் பணி செய - தனது ஆணை இவ்வுலகம் முழுதும் ஆட்சி புரியும் படியாக; சம்பரப் பெயருடை - சம்பராசுரன் என்ற பெயர் உடைய; தானவர்க்கு இறைவனை - அசுரர் குலத்து அரசனை; தனு வலத்தால் - தனது வில்லின் வலிமையால், அம்பரத்து உம்பர் புக்கு - விண்வழியே வானுலகு சென்று; அமரிடைத் தலை துமித்து - தேவர்களைத் துன்புறுத்திய அவ்வரக்கனுடன் போரிட்டு அவன் தலையைத் துண்டித்து; அமரர் உய்ய - தேவர்கள் உய்யுமாறு; உம்பருக்கு இறைவனுக்கு - தேவர்களுக்கு மன்னனான இந்திரனுக்கு; அரசு அளித்து - (சம்பரனிடமிருந்து மீட்ட விண்ணுலகத்தின்) ஆட்சியைத் தந்து; உதவினான் - தேவர்களுக்கு உதவி செய்தான்; இசை வளர்த்தான் - அதனால் பெரும் புகழ் பெற்றான்.
அம்பரம் -விண். துமித்து -துண்டித்து. நேமி-ஆணை. இந்தச் செய்தி கையடைப் படலம் 9ம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது காண்க. ஐந்து சீராகப்பிரித்துக் கலித்துறையாகவும் இது முதலாக 6/68 ஆம் பாடல் வரையுள்ளவற்றைக் கொள்ளவும் கூடும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lord of the dānavas, the one named Campara: by the strength of his bow,
- he went up through the sky into heaven, cut off his head in battle so the gods might live,
- gave the kingdom back to the king of the gods and so came to their aid; one man,
- whose rule held sway over this whole earth, Tacarataṉ by name, who made his fame grow.
What the poem says
Vīṭaṇaṉ now turns to Irāmaṉ's lineage. His father Tacarataṉ once flew to heaven, killed the demon Campara who was tormenting the gods, and restored Indra's throne. The point is that this human family has already beaten demons, so it is foolish to despise them as mere men.