கம்பராமாயணம் 6195 · யுத்த 2.83

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மிடல் படைத்து ஒருவனாய் அமரர் கோன் விடையதாய் வெரிநின் மேலாய்
உடல் படைத்து, அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும்
அடல் படைத்து அவனியைப் பெருவளம் தருக என்று அருளினானும்
கடல் படைத்தவர் நெடுங் கங்கை தந்தவன் வழிக் கடவுள் மன்னன்.

பொருள் · Meaning in Tamil

மிடல் படைத்து - (அந்தத் தயரதன்) மிகுந்த வலிமை கொண்டு; ஒருவனாய் - தனக்கெவரும் ஒப்பில்லாத ஒருவனாகவே, அமரர் கோன் விடையதா - தேவேந்திரனே காளையாக, வெரி நின் மேலாய் - அக்காளையின் முதுகின் மேல் அமர்ந்து; உடல் படைத்து - மாறுபாடு கொண்டு (அரக்கருடன் பகை கொண்டு); அவுணர் ஆயினர் எலாம் மடிய - அரக்கர்களான எல்லோரும் செத்தொழிய; வாள் உருவினானும் - வாளை உருவிப் போரிட்டவனான ககுத்தனும்; அவனியை அடல் படைத்து - உலகத்தை எல்லாம் வென்று; பெருவளம் தருக - நிறை வளம் தருக; என்று அருளினானும் - என்று கூறி உலகமக்களுக்கு அருள் செய்து உதவிய பிருதுவும்; கடல் படைத்தவரொடும் - கடலை உண்டாக்கிய சகரர்களுடனே; கங்கை தந்தவன் - கங்கையை மண்ணுலகுக்குக் கொண்டு வந்த பகீரதனும்; வழிக் கடவுள் மன்னன் - தோன்றிய குலத்திலே பிறந்த தெய்வத்தன்மை உடைய மன்னனாவான்.

மிடல்- வலிமை. அமரர்கோன்-தேவேந்திரன். விடை-காளை. வெரிந்-முதுகு. உடல்- மாறுபாடு. அவுணர் மடிய வாள் உருவியவன் ககுத்தன்; அவனியை வளம் தரச் செய்தவன் பிருது. கடல் படைத்தவர் சகரர்; கங்கையைக் கொணர்ந்தவன் பகீரதன். இவர்களெல்லாம் பிறந்த சூரியகுலத்தில் பிறந்தவன்தான் தசரதன். தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்றால், மானிடர்களைக் குறைவாக மதிப்பிடலாமோ என்று எடுத்துக் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One who, mighty and alone, mounted the king of the gods turned into a bull,
  2. took up enmity and drew his sword so that all the asuras perished;
  3. one who, conquering the earth, graciously bade it, Yield great abundance;
  4. with those who made the sea and the one who brought the Gaṅgā: in their line came this godlike king.

What the poem says

The verse lists the famous ancestors of the Solar dynasty: Kakuttaṉ, who rode Indra in the form of a bull to fight the asuras; Pirutu, who made the earth yield its wealth; the sons of Cakaraṉ, whose digging formed the ocean; and Pakīrataṉ, who brought the Gaṅgā down from heaven. Tacarataṉ was born into this divine line, so his sons are not to be belittled.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṭal paṭaittu oruvaṉāy amarar kōṉ viṭaiyatā veriniṉ mēlāy
uṭal paṭaittu, avuṇar āyiṉar elām maṭiya vāḷ uruviṉāṉum
aṭal paṭaittu avaṉiyaip peru vaḷam taruka eṉṟu aruḷiṉāṉum
kaṭal paṭaittavaroṭum kaṅkai tantavaṉ vaḻik kaṭavuḷ maṉṉaṉ.