கம்பராமாயணம் 6196 · யுத்த 2.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொய் உரைத்து - பொய் கூறி வாழ்ந்தும்; உலகினில் சினவினார் குலம் - உலகிலே சினந்து எழுந்து தீமை செய்பவரும் ஆகிய அரக்ககுலத்தினர்; அறப்பொருது - அடியோடு அழியும்படி போர் செய்து; தன் வேல் நெய் உரைத்து - தனது வேலுக்கு நெய் பூசி; உறையில் இட்டு - உறையில் இட்டு வைத்து; அறம் வளர்த்து- அறநெறிகளை விரும்பி வளர்த்து; ஒருவனாய் நெறியில் நின்றான் - ஒப்பற்றவனாய் ஒழுக்க நெறியிலே நிலைத்து நின்றவன்; மை உரைத்து உலவு கண் - மை பூசப்பட்ட அசைகின்ற கண்ணை உடைய; மனைவி பால்வரம் அளித்து - மனைவியான கைகேயிக்கு இரண்டு வரங்களைக் கொடுத்து; அவை மறாது மெய் உரைத்து - அவற்றை மறுக்காமல் உண்மையை உரைத்து; உயிர் கொடுத்து - உயிரையும் தந்து; அமரரும் பெறுகிலா - தேவர்களும் அடைய இயலாத; வீடு பெற்றான் - பேரின்ப வீடான பரமபதத்தை அடைந்தான் (அந்தத் தயரதனாவான்).
'உரைத்து' என்பது 'பொய் உரைத்து' எனப் பேசி என்ற பொருளிலும் 'நெய் உரைத்து' என்பதில் பூசி என்ற பொருளிலும் 'மை உரைத்து' என்பதில் தீட்டி என்ற பொருளிலும் வந்தது. சினவுதல் - சினந்தெழுதல். பொய் உரைத்தலும், சினந்தெழுதலும் அரக்கருக்குரிய தாதலின் 'குலம்' என்பதற்கு அரக்க குலம் என்று பொருள் கொள்ளப்பட்டது. பிறழும் தன்மை உடைய கண்களை 'உலவு கண்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Waging war till the race of those who live by lies and rage across the world was wiped out,
- he oiled his spear and laid it in its sheath, fostered dharma, and stood alone on the right path;
- to his wife whose roving eyes were lined with collyrium he granted boons, and not refusing them,
- he kept his word, gave up his life, and gained the release the gods themselves cannot attain.
What the poem says
Tacarataṉ's life in brief: he crushed the demons, then put away his weapons and ruled justly. When Kaikēyi claimed the two boons he had promised her, he honoured them rather than break his word, and died of grief at Irāmaṉ's exile, winning final liberation. The verse plays on the word "uraittu", which means speaking lies, rubbing on oil, and applying eye-black in its three uses.