கம்பராமாயணம் 6197 · யுத்த 2.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எம்பெரும- எங்கள் தலைவனே! அனையவன் சிறுவர்- அத்தகைய தயரதனது புதல்வர்கள்; உன் பகைஞர் ஆனவரை - உனக்கு பகைஞர் ஆயினர் அவர்களை; இனையர் என்று உணர்தியேல் - இத்தன்மை உடையவர்கள் என்பதை அறிய விரும்புவையேல்; இருவரும் ஒருவரும் எதிரிலாதார் - இராமன், இலக்குவன் ஆகிய இருவரும் ஒப்பாக எவருமில்லாதவர்; முனைவரும் அமரரும் - முனிவர்களும் தேவர்களும்; முழுதுணர்ந்தவர்களும் - முழுதும் உணர்ந்த ஞானிகளும்; முற்றும் மற்றும் - மற்றுமுள்ள உயிர்கள் எல்லாமும்; நினைவு அரும் தகையர் - நினைக்கவும் அரிய தன்மையர்; நம் வினையினால் மனிதராய் - நாம் செய்த தீவினையால் மனிதர்களாக; எளிது நின்றார் - எளிதில் காண வந்து நின்றார்கள்.
வீடணன் இராவணனிடம் கொண்ட பெருமதிப்பால் அவரை 'எம்பெரும' என அழைத்தான். தசரத புத்திரர்களை இத்தகையர் என உணர்தல் அரிது என்பதனால் "அம்மா" என வியந்துரைத்தான். 'ஒருவரும் எதிரிலாதார்' ஒப்பாரும் மிக்காருமில்லாதவர் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those sons of such a father, my lord, who have become your enemies, ah,
- if you would know what they are: the two of them have no one to match them;
- sages, gods, those who know all things, and every other being besides
- can scarcely conceive their nature; through our evil deeds they stand here, easy to see, as men.
What the poem says
Having praised Tacarataṉ, Vīṭaṇaṉ turns to his sons. Irāmaṉ and Ilakkuvaṉ are beyond the comprehension of sages and gods; they have taken human form, and it is the demons' own sins that have brought these divine beings into the open as their foes. He addresses Irāvaṇaṉ respectfully as "my lord" and exclaims in wonder at what he describes.