கம்பராமாயணம் 6198 · யுத்த 2.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நம்ப - விருப்பத்துக்குரியவனே! அக்குளிர் மலர்ப்பேராசனத்தவனொடு - அந்தக் குளிர்ந்த தாமரை மலரை ஆசனமாக உடைய பிரமனோடு; எவ்வுலகமும் தருவென் - எல்லா உலகங்களையும் படைப்பேன்; என்று அமையலுற்றான் கோசிகப் பெயருடைக் குலமுனித்தலைவன் - என்று தொடங்கியவனாய கோசிகன் என்ற பெயருடைய முனிவர் தலைவன் விசுவாமித்திரன்; ஈசனின் பெறு படைக்கலம் - சிவபிரானிடம் பெற்ற ஆயுதங்கள்; இமைப்பளவில் - கண்ணிமைக்கும் நேரத்தில்; எவ்வுலகில் யாவும் - எவ்வுலகிலும் வாழும் எல்லாவற்றையும், நாசம் உற்றிட நடப்பன - நாசம் செய்யும்படி செல்வனவும்; கொடுத்தன - கொடுத்தனவும் ஆகியவற்றை, பிடித்துடையர் - கைக்கொண்டுள்ளனர்.
பிரமதேவன் போலவே எல்லா உலகங்களையும் எனது தவபலத்தால் இப்போதே படைப்பேன்' எனத் தொடங்கிய ஆற்றலுள்ளவர் விசுவாமித்திரர். நம்பன் - விரும்பத்தக்கவன். கோசிகன் -விசுவாமித்திரனின் மற்றொரு பெயர். விசுவாமித்திரர் திரிசங்கு மன்னனுக்காக எல்லா உலகங்களையும் படைக்கத் தொடங்கியது, இராம இலக்குவர்களுக்கு ஆயுதம் வழங்கியது ஆகிய செய்திகள் பாலகாண்டத்துள் கூறப்பட்டுள்ளன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The chief of the sage clan, named Kaucikaṉ, who once set out
- to create every world, rivalling the god seated on the cool lotus,
- gave them weapons he had won from Īcaṉ, which in the blink of an eye
- go forth to destroy everything in every world; these they hold, my dear lord.
What the poem says
Kaucikaṉ is Vicuvāmittiraṉ, the sage so powerful that he once began to create a whole new universe, like Brahmā, for King Triśaṅku. He gave Irāmaṉ and Ilakkuvaṉ the divine weapons he had received from Śiva, as told in the first book of the epic. Vīṭaṇaṉ's point is that the brothers carry arms that can annihilate any world.