கம்பராமாயணம் 6199 · யுத்த 2.87

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எறுழ்வலிப் பொருவில் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து,
உறுதிறல் கலுழன்மீது ஒருவன் நின்று அமர் செய்தான் உடைய வில்லும்,
தெறு சினத்தவர்கள் முப்புரம் நெருப்பு , உருத்து எய்த அம்பும்
குறுமுனிப் பெயரினான் நிறைதவர்க்கு இறை தரக் கொண்டு நின்றான்.

பொருள் · Meaning in Tamil

எறுழ் வலிப் பொருவில் தோள் - மிகுந்த வலிமை உடைய நிகரற்ற தோளாற்றலும் உள்ள; அவுணரோடு - அசுரர்களுடன்; அமரர் பண்டு இகல் செய்காலத்து - முன்பு தேவர்கள் போர் செய்த காலத்திலே; உறுதிறல் கலுழன் மேல்- மிக்க வலிமை உடைய கருடன் மேல் அமர்ந்து; ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் - ஒருவனாக எதிர்த்து நின்று போர் செய்த திருமாலின் வில்லும்; தெறு சினத்தவர்கள் - எவரையும் அழிக்கும் வன்மையும் சினமும் உடைய அரக்கர்கள் வாழும்; முப்புரம் நெருப்பு உருத்து எய்த அம்பும் - திரிபுரம் தீப்பற்றி அழிய, சிவபெருமான் சினந்தெய்த அம்பும்; குறுமுனிப் பெயரினான்- அகத்தியர் என்ற பெயர் கொண்ட முனிவரும்; நிறை தவர்க்கு இறை தர - நிறைந்த தவத்தை உடைய முனிவர்களுக்கெல்லாம் தலைவரு மானவர் தர; கொண்டு நின்றார் - அவற்றைப் பெற்றுக் கொண்ட சிறப்புடையவர்கள்.

எறுழ்வலி-மிக்க வலிமை. கலுழன்-கருடன். குறுமுனி-அகத்தியர். அகத்தியர் இராமனுக்கு வில்லும் அம்பும் கொடுத்த செய்தி, ஆரண்ய காண்டம் அகத்தியப் படலத்துள் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When long ago the gods warred with the asuras of mighty, matchless arms,
  2. the bow of the one who stood alone on powerful Garuḍa and fought,
  3. and the arrow loosed in fury that set ablaze the three cities of the wrathful ones:
  4. these they received when the sage called the Short One, lord of all perfect ascetics, gave them.

What the poem says

Agastya, the "short sage" and greatest of ascetics, gave Irāmaṉ the bow Viṣṇu used against the asuras while riding Garuḍa, and the arrow with which Śiva burned the three flying cities of the demons. This happened in the forest book, and Vīṭaṇaṉ cites it as further proof of the brothers' power.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṟuḻ valip poru il tōḷ avuṇarōṭu amarar paṇṭu ikal cey kālattu,
uṟu tiṟal kaluḻaṉmēl oruvaṉ niṉṟu amar ceytāṉuṭaiya villum,
teṟu ciṉattavarkaḷ muppuram neruppuṟa, uruttu eyta ampum
kuṟumuṉip peyariṉāṉ niṟai tavarkku iṟai tarak koṇṭu niṉṟār.