கம்பராமாயணம் 6200 · யுத்த 2.88

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பகழிநாகம்- இராமனிடமுள்ள அம்புகளாகிய நாகங்கள்; நாவினால் உலகை நக்கிடுவ - நாவால் உலகை எல்லாம் நக்கும் திறனுடையன; திக்கு அளவிடற்குரிய - திசைகளை அளவிடுவதற்கு உரியன; நாளும் மேவு தீவிடம் உயிர்ப்பன - நாள்தோறும் பொருந்திய தீய விஷத்தை வெளிவிடுவன; வெயில் பொழி எயிற்றன - ஒளியை உமிழும் பற்களை உடையன; அவ்வீரர் ஆவமாம் அரியபுற்று உறைவன - அந்த வீரர்களாகிய இராம இலக்குவர்களின் அம்புக் கூடாகிய புற்றிலே தங்கி இருப்பன; முற்று அறிவருக்கு - முற்றுணர்ந்த மெய்யறிவினராகிய முனிவர்களுக்கு; அழிவு செய்யும் பாவ காரியர்- தீமை விளைவிக்கும் பாவிகளின்; உயிர்ப்பதம் அலாது - உயிராகிய உணவை அல்லாது; இரை பெறா - வேறு இரையைப் பெறாதனவாம்.

பகழிநாகம்-பகழியை நாகமாக உருவகித்தார். அதற்கேற்ப நாகத்தின் செயல்களாக நக்குதல், விடமுயிர்த்தல், புற்றுறைதல் ஆகிய செயல்களைக் கூறுவதால் முற்றுருவகம் ஆகும். ஆவம் - அம்பறாத்தூணி. இதனை அரிய புற்று என்றார். பதம் - உணவு. பாவகாரியர்-பாவம் செய்பவர்கள் (தீயவர்). வெயில்-ஒளி. அம்பைப் பாம்பாக உருவகம் செய்ததற்கேற்ப நாக்கும், பல்லும் கூறப்பட்டன. உலகை நக்கிடுவ- உலகத்தையே நாவினால் நக்கிக் கொல்லவல்லன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With their tongues they would lick up the world; they can measure out the directions;
  2. every day they breathe out deadly poison; their fangs pour forth blazing light;
  3. they dwell in the rare anthill that is those heroes' quiver; apart from the lives
  4. of sinners who harm the all-knowing sages they take no prey: these serpents, their arrows.

What the poem says

The whole verse is a sustained metaphor: Irāmaṉ's arrows are snakes. Like serpents they have tongues, venom and gleaming fangs, and they live in an anthill, which is the quiver. Their only food is the lives of evildoers who torment sages, a clear warning to the demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāviṉāl ulakai nakkiṭuva; tikku aḷaviṭaṟku uriya; nāḷum
mēvu tī viṭam uyirppaṉa; veyil poḻi eyiṟṟaṉa; av vīrar
āvam ām ariya puṟṟu uṟaiva; muṟṟu aṟivarukku aḻivu ceyyum
pāva kāriyar uyirp patam alātu irai peṟā; pakaḻi nākam.