கம்பராமாயணம் 6201 · யுத்த 2.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வில்லும் - அவர்கள் கைக்கொண்ட விற்களும்; தாருவோ வேணுவோ - மரமோ, மூங்கிலோ (அல்ல); தாணுவாய் உலகினைத் தழுவி நிற்கும் - தூணாக உலகத்தையே தாங்கி நிற்கின்ற, மேருவோ மால்வரைக் குலமெலாம் அல்லவோ - மேருமலையோ அல்ல பெரிய மலைகளையெல்லாம் சேர்த்தமைத்தன அல்லவோ? இவ் அவர்களால் அல்லது - இந்த வீரர்களான இராம இலக்குவர்களை அல்லது; ஒருவரால் பேருமோ - வேறு ஒருவரால் அசைக்க இயலுமோ? நாரும் மூரியும் அறா - நாணும் வலிமையும் நீங்காதன; பெரிய வேனும் - (நமது விற்கள்) உருவத்தில் பெரியனவாயினும்; நம்முடைச் சிலைகள் போல் நலிவ ஆமோ - நம்முடைய விற்களைப் போல (அவை) நலிவன ஆமோ?
'வில்' உகரச் சாரியை பெற்று 'வில்லு' என வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Could anyone but those two move them? Though our bows are large,
- their string and strength never fail; could they weaken like our bows?
- Are they wood? Are they bamboo? Are those bows not Mēru, standing as a pillar
- that holds up the world, or the whole race of great mountains joined together?
What the poem says
Vīṭaṇaṉ describes the brothers' bows. They are not made of wood or cane but seem forged from Mount Mēru, the world's axis, or from all the great mountains together. No one but Irāmaṉ and Ilakkuvaṉ could bend them, and unlike the demons' bows, big as they are, they never lose string or strength.