கம்பராமாயணம் 6202 · யுத்த 2.90

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உரம் ஒருங்கியது நீர்கடையும் வாலியது மார்பு; உலகை மூடும்
மரம் ஒருங்கிய, கர ஆதியர் விராதனது மால் வரைகள் மானும்
சிரம் ஒருங்கின; இனிச் செரு ஒருங் குளது எனில் தெவ்வர் என்பார்
பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ?

பொருள் · Meaning in Tamil

நீர் கடையும் வாலியது மார்பு - (இராமன் ஏவிய அம்பால்) பாற்கடலை ஒருவனாகவே கடைந்த வாலியின் மார்பு; உரம் ஒடுங்கியது - வலிமை ஒடுங்கிப் போயிற்று, உலகை மூடும் மரம் ஒடுங்கிய- உலகை மூடுமளவுக்கு ஓங்கி வளர்ந்தமராமரங்கள் ஒடுங்கின; கராதியர் விராதனது - கரன் முதலியோருடையவும் விராதனுடையதுமான; மால் வரைகள் மானும் சிரம் ஒருங்கின - பெரிய மலைகளை ஒத்ததலைகள் ஒடுங்கின; இனிச் செரு ஒடுங்கின - இனி அசுரர் போர் செய்வது ஒடுங்கின; இனி தேவர் என்பார்- இனி, தேவர்கள் என்போரிடம்; பரம் ஒருங்குவது அலால்- நமது சுமை ஒடுங்குவதல்லாது; பிறிது ஒருங்காததோர் பகையும் உண்டோ - வேறு அவர்களுக்கு ஒடுங்காத பகைவர்களும் உண்டோ?

நீர்- இங்கே பாற்கடலைக் குறிக்கும். கராதியர் -கரன் முதலானோர். மானும்- ஒக்கும். பரம்-சுமை. அலால் - அல்லால் என்பதன் இடைக்குறை. ஒருங்குதல்- ஒடுங்குதல், அழிதல் என்ற பொருள் தந்து நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Its strength sank: the chest of Vālī who churned the ocean; the trees that would cover the world
  2. sank; and the heads of Karaṉ and the rest and of Virātaṉ, like great mountains,
  3. sank; from now on war itself has sunk, and those called the gods
  4. will only see their burden sink. Is there any enemy that will not sink before them?

What the poem says

The verse is built on one repeated verb, "to sink" or be brought low. Irāmaṉ's arrows pierced Vālī, who once churned the ocean of milk alone; they went through the seven giant sāla trees; they cut off the heads of Karaṉ, his companions and the demon Virātaṉ. Now the gods' burden of fear will be lifted, and no enemy can stand.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uram oruṅkiyatu nīr kaṭaiyum vāliyatu mārpu; ulakai mūṭum
maram oruṅkiya, karātiyar virātaṉatu māl varaikaḷ māṉum
ciram oruṅkiṉa; iṉic ceru oruṅkiṉa iṉi tēvar eṉpār
param oruṅkuvatu alāl piṟitu oruṅkātatu ōr pakaiyum uṇṭō?