கம்பராமாயணம் 62 · பால 2.42

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இயல்புடை பெயர்வன மயில்; மணி இழையின்
வெயில் புடை பெயர்வன; வெறி அலர் குழலின்
புயல் புடை பெயர்வன பொழில்; அவர் விழியின்
கயல் புடை பெயர்வன கடி கமழ் கழனி.

பொருள் · Meaning in Tamil

மயில் இயல்புடை பெயர்வன - மயில்கள் அந்நாட்டுப் பெண்களின் சாயலைப் பெற்று நடமாடுகின்றன; மிளிர்முலை மணி இழையின் வெயில்புடை பெயர்வன - அப்பெண்களின் தனங்களில் அணிமணிகள் பதித்துச் செய்யப்பட்ட அணிகலங்களைப்போல வெயில் எங்கும் ஒளி வீசின; குழலின் புயல்புடை பெயர்வன பொழில் - அப்பெண்களது கூந்தலைப் போல மேகங்கள் சோலைகளில் சஞ்சரித்தன; அவர் விழியின் கயல் கடிகமழ் கழனி புடை பெயர்வன - அவர்களது கண்களைப் போல கயல் மீன்கள் மலர் மணம் கமழும் வயல்களிலே புரள்வனவாமே.

பெண்களின் சாயலுக்கு மயிலும், அவர்களின் அணிகலன்களின் ஒளிக்கு வெயிலும், கூந்தலுக்கு மேகமும், கண்களுக்கு மீன்களும் ஒப்பாகி, அந்நாட்டில் புடை பெயரும் என்பது கருத்து. பெண்களது சாயல் முதலிய உவமேயங்களை - உவமானங்களாக்கி, மயில் முதலியவைகளுக்கு மாற்றிக் கூறியதால் இது 'எதிர் நிலை அணி' ஆகும்.

மயில்கள் மகளிரின் சாயலுக்குத் தோற்றும், வெயில் மணி இழைச் சுடருக்குத் தோற்றும், புயல் குழலுக்குத் தோற்றும் கயல் கருவிழிக்குத் தோற்றும் புடை பெயர்ந்தன என்று பொருள் கூறினும் பொருந்தும். புடை பெயர்தல்: அப்பால் செல்லுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Peacocks move about with the grace of these women; of their gem-set jewels
  2. the glow is the sunlight moving on their shining breasts; like their tresses
  3. the clouds move through the groves; like their eyes
  4. the carp move about in the fragrant fields.

What the poem says

A section on the beauty of the women of Kōcalam begins. Poets normally compare a woman's grace to a peacock, the glitter of her jewels to sunlight, her hair to dark clouds and her eyes to darting carp. Here the comparison is reversed: the peacocks borrow the women's grace, the sunlight shines like their jewels, the clouds drift like their hair, and the carp dart like their eyes. This reversal is called the figure of contrast.

Another reading takes the verb "move away" to mean that peacocks, sunlight, clouds and fish all retreat, defeated by the women's beauty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iyal puṭaipeyarvaṉa mayil; maṇi iḻaiyiṉ
veyil puṭaipeyarvaṉa miḷir mulai; kuḻaliṉ
puyal puṭaipeyarvaṉa poḻil; avar viḻiyiṉ
kayal puṭaipeyarvaṉa kaṭi kamaḻ kaḻaṉi.