கம்பராமாயணம் 63 · பால 2.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இடை இற, மகளிர்கள் எறிபுனல் மறுக, குடைபவர் - தங்கள் இடை ஒடிவது போலத் தோன்றும் பெண்கள் அலையடிக்கும் நீர் கலங்க நீராடுபவர்களின்; துவர் இதழ் என - பவளம் போன்ற சிவந்த உதடுகளைப் போல; குமுதம் மலர்வன - குமுத மலர்கள் மலர்வனவாகும்; மடைபெயர் அனம் என - நீர்மடைகளில் வாழும் அன்னங்களைப் போல; மடநடை அளகம் - மெல்லிய நடையையும், அழகிய கூந்தலையும் உடைய; கடைசியர் முகம் என - அந்நாட்டு உழத்தியரின் முகம் போல; கமலம் மலர்வன - தாமரை மலர்கள் மலர்வனவாகும்.
குமுதம் பெண்களின் வாயிதழ்களைப் போல மலர்ந்தன, தாமரை உழத்தியரின் முகம் போல மலர்ந்தன என, உவமானத்தை உவமேயமாகக் கூறியதால் 'எதிர்நிலையணி' யாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the women, their waists all but breaking, bathe till the tossing water is churned,
- the red water lilies open like the coral lips of those who bathe;
- and like the faces of the farm women, who walk softly like swans moving by the sluices, with lovely tresses,
- the lotuses bloom.
What the poem says
The reversed comparisons continue. Normally a poet would say a woman's lips are like red water lilies and her face like a lotus. Here, as women with waists so slender they seem about to snap splash about bathing, the water lilies open like their red lips. And the lotuses in the fields bloom like the faces of the farm women, who walk with the gentle gait of swans. Once again the usual subject and object of comparison have changed places.