கம்பராமாயணம் 64 · பால 2.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வனிதையர் அயில் விழி - அந்நாட்டுப் பெண்களின் வேல் போன்ற கண்கள்; விதியினை நகுவன - நான்முகனைப் பழிப்பன; அவர் நடை பிடியின் கதியினை நகுவன - அவர்களது நடை பெண் யானைகளின் நடையைப் பழிப்பன; புணர் முலை கமலப் பொதியினை நகுவன - அப்பெண்களின் இணைந்துள்ள மார்புகள் தாமரை அரும்புகளைப் பழிப்பன; வதனம் கலைவாழ் மதியினை நகுவன - அவர்களது முகங்கள் கலைகளை உடைய சந்திரனைப் பழிப்பனவாகும்.
பெண்களின் விழிக்கு வேலும், நடைக்குப் பெண்யானை நடையும், தனங்களுக்குத் தாமரை அரும்பும், முகத்துக்குச் சந்திரனும் உவமைகளாகச் சொல்லப்படுவன. இங்கு வேல் முதலியவை விழி முதலியவைகளைவிட விஞ்சியிருப்பதால் அவைகளை நகுவனவாயின என்றது; எதிர்நிலையணியாம்.
படைத்த நான்முகனே மயங்கவல்ல விழிகளாதலின் தமக்கு நிகராகா (நான்முகனை) கண்கள் பழிப்பனவாம். மலர்வதும் குவிவதுமான தாமரை முகையைப் போலல்லாது என்றும் ஒரு தனிமையாய் இருக்கும் தனங்கள் தாமரை முகைகளைப் பழித்தன. தேய்தலும் வளர்தலுமாக உள்ள மதி - என்றும் மலர்ந்தே உள்ள முகத்துக்கு நிகராகா தாதலின் மதியை முகம் பழிப்பன வாயின என்று கூறியதன் நயம் உணர்ந்து மகிழ்தற்குரியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their spear-sharp eyes laugh at Fate itself; at the gait
- of the cow elephant their walk laughs; at the lotus
- bud their paired breasts laugh; at the moon where the digits dwell
- the faces of these women laugh.
What the poem says
The women's beauty outdoes everything it is usually compared to. Their spear-like eyes mock even Brahmā, the creator who decides fate, for they could bewilder the very god who made them. Their walk mocks the stately gait of the cow elephant. Their breasts mock lotus buds, which open and close, and their faces mock the moon, which waxes and wanes, while their faces are always in full bloom.