கம்பராமாயணம் 65 · பால 2.45

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பகலின் ஒடு இகலுவ படர் மணி; மடவார்
நகிலின் ஒடு இகலுவ நனி வளர் இள நீர்;
துகிலின் ஒடு இகலுவ சுதை புரை நுரை; கார்
முகிலின் ஒடு இகலுவ கடி மண முரசம்.

பொருள் · Meaning in Tamil

படர்மணி - பரவிக் கிடக்கின்ற மணிகள்; பகலினொடு இகலுவ - சூரிய ஒளியுடன் மாறு கொண்டொளிர்வன; நளிவளர் இளநீர் - குளிர்ந்த இளநீர்கள்; மடவார் நகிலினொடு இகலுவ - பெண்களின் தனங்களோடு மாறுபட்டு விளங்குவனவாம்

அந்நகர மாதர் அணியும் அணிகலன்களில் பதித்துள்ள இரத்தினங்கள் சூரியன் ஒளியை விட மிக்கு விளங்குவன. அவர்தம் முலைகள் செவ்விளநீர்களை விட வடிவத்தால் திரட்சியால் சிறந்து விளங்குவன. அவர்கள் அணியும் நூலாடைகள் பால் நுரையை விட மெல்லியனவாக நொய்யனவாக விளங்குவன. மணமுரசு ஒலியோ மழை மேகத்தின் குமுறு குரலினும் மிக்கு விளங்குவது. மாறுபடல் - போட்டியிட்டும் தோல்வி காணுதல். நளி - பெருமை, செறிவு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Scattered gems vie with the light of day; with the breasts
  2. of the women vie the full young coconuts;
  3. with their garments vies the foam, white as lime; with the dark
  4. rain clouds vie the fragrant wedding drums.

What the poem says

Four contests, each lost by nature. The gems set in the women's jewels shine brighter than the sun. Their breasts are rounder and fuller than young coconuts. The thin cloth of their garments is finer and lighter than white milk foam. And the wedding drums that sound all over the land roar louder than the thunder of the rain clouds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pakaliṉoṭu ikaluva paṭar maṇi; maṭavār
nakiliṉoṭu ikaluva naḷi vaḷar iḷanīr;
tukiliṉoṭu ikaluva cutai purai nurai; kār
mukiliṉoṭu ikaluva kaṭi maṇa muracam.