கம்பராமாயணம் 66 · பால 2.46

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கார் ஒடு நிகர்வன கடி பொழில்; கழனிப்
போரொடு நிகர்வன பொலன் வரை; பணை சூழ்
நீரொடு நிகர்வன நிறை கடல்; நிதி சால்
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம்.

பொருள் · Meaning in Tamil

காரொடு நிகர்வன கடிபொழில் - மேகங்களுடன் அந்தநாட்டுச் சோலைகள் ஒப்பனவாகும்; கழனிப் போரொடு நிகர்வன புணர்மலை - வயல்களிலே குவித்து வைத்துள்ள நெற்போருடன் நெருங்கிய மலைகள் ஒப்பனவாகும்; அணை சூழ் நீரொடு நிகர்வன நிறை கடல் - அணைகளில் தேங்கிய நீர்த்தேக்கத்துடன் நீர் நிறைந்த கடல் ஒப்பதாகும்; நிதிசால் ஊரொடு நிகர்வன இமையவர் உலகம் - செல்வம் மிக்க அந்த நாட்டு ஊர்களோடு தேவர் உலகு ஒப்பதாகும்.

அந்த நாட்டுச் சோலைகள் மேகங்களை ஒத்தும், நெற் போர்கள் மலைகளை ஒத்தும், நீர்த்தேக்கங்கள் கடலை ஒத்தும் ஊர்கள் எல்லாம் தேவர் உலகை ஒத்தும் இருந்தன என்பது கருத்து. புணர்மலை: மலைத்தொடர்ச்சி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The fragrant groves are matched by the rain clouds; the stacks in the fields
  2. are matched by the linked mountain ranges; the waters ringed by the dams
  3. are matched by the brimming sea; the towns rich in wealth
  4. are matched by the world of the unblinking gods.

What the poem says

Kōcalam's features are so grand that only the greatest things in nature can match them. Its dense groves are dark as rain clouds, and its stacks of harvested paddy rise like mountain ranges. The water held behind its dams is as vast as the full sea. Its wealthy towns rival the heaven of the gods, who never blink. As in the preceding verses, the land is the standard and nature is measured against it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāroṭu nikarvaṉa kaṭi poḻil; kaḻaṉip
pōroṭu nikarvaṉa puṇarmalai; aṇai cūḻ
nīroṭu nikarvaṉa niṟai kaṭal; niti cāl
ūroṭu nikarvaṉa imaiyavar ulakam.