கம்பராமாயணம் 6213 · யுத்த 2.101
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐயா! இச்சை அல்லன உறுதிகள் - நான் விரும்பத்தகாத உறுதிகளை; இசைக்குவென் என்றாய் - எனக்குச் சொல்வேன் என்றாய்; பிச்சர் சொல்லுவ சொல்லினை - பித்தர்கள் கூறுவதைக் கூறினாய்; என் பெரு விறலை - எனது பேராற்றலை; கொச்சை மானிடர்- அற்பமான மனிதர்கள்; வெல்குவர் என்றனை - வெல்லுவார்கள் என்று கூறினாய், குறித்தது - இவ்வாறு குறிப்பிட்டுக் கூறியது; அச்சமோ - அந்த மனிதர்களிடம் கொண்ட அச்சத்தாலோ? அவர்க்கு அன்பினோ - அவர்களிடம் நீ கொண்ட அன்பு காரணமாகவா? யாவதோ - அல்லது வேறேதேனும் காரணம் கருதியோ?
பிச்சர் - பித்தர். விறல்-வலிமை, கொச்சை - இழிவு (அற்பம்) "தெள்ளிய பொருள் இயம்பலாற்றுவன்” என வீடணன் முன் கூறியதை நினைத்து 'உறுதிகள் இசைக்குவன் என்றாய்' என்றான் என்க. 'உறுதிகள் சொல்வதாகத் தொடங்கி பித்தர் போல் பிதற்றுகிறாயே' என வீடணன் கூறியதை எள்ளுகிறான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You said you would speak counsel I would not want to hear!
- You have spoken what madmen speak; you said my great might
- would be conquered by vile mortals. What moved you to this?
- Was it fear? Was it love for them? Or what else, sir?
What the poem says
Irāvaṇaṉ answers Vīṭaṇaṉ with scorn. His brother had begun by promising sound, if unwelcome, advice; Irāvaṇaṉ says what followed was the raving of a madman. He demands to know whether Vīṭaṇaṉ spoke out of cowardice, out of secret sympathy for Irāmaṉ, or for some other motive, a suspicion that will grow.