கம்பராமாயணம் 6214 · யுத்த 2.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஈங்கு மானுடப்பசுக்களுக்கு - இங்கே மனிதர்களாகிய இந்தப் பசுக்களைக் கொல்ல; இலைவரம் என்றாய் - நான் (பிரமனிடம்) வரம் பெறவில்லை என்று கூறினாய்; தீங்கு சொல்லினை - இதனால் பழுதானதையே கூறினாய்; திசைகளை உலகொடும் செருக்கால் தாங்கும் - எல்லாத் திசைகளையும் உலகத்தோடு தமது வலிமையால் தாங்கும்; யானையைத் தள்ளி - திக்கு யானைகளை வென்று விலக்கிட; அத்தழல் நிறத்தவனை - அந்தத் தீ நிறத்தவனான சிவபிரானை; ஓங்கல் ஒன்றொடும் - அவனிருக்கும் கைலை மலையோடும்; எடுக்கவும் வரம் கொண்டதுண்டோ? - பேர்த்து எடுப்பதற்கு வரம் கேட்டுப் பெற்றதுண்டோ?
'மனிதர்பால் கொற்றம் கொள்ளலை' (6148) என்று வீடணன் கூறியதை எண்ணி, 'இலைவரம்' என்றாய் என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You said, Here you have no boon against these human cattle;
- what you say is wrong. Did I get a boon to thrust aside the elephants
- that in their pride bear up the directions with the world,
- or to lift up the one whose colour is fire together with his mountain?
What the poem says
Irāvaṇaṉ dismisses the argument that he is defenceless against men because his boon from Brahmā did not cover them. He did not need a boon to overpower the elephants that hold up the eight directions, or to lift Mount Kailāsa with fiery Śiva on it. His strength is his own, so mere "human cattle" are no threat.