கம்பராமாயணம் 6215 · யுத்த 2.103

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை; வானோர்
சினக் கொடும் படை செருக்களத்து என்னை என் செய்த?
எனக்கு நிற்க; மற்று என்னொடு இங்கு ஒருவயிற்று உதித்த
உனக்கு மானிடர் வலியராம் தகைமையும் உளதோ?

பொருள் · Meaning in Tamil

மனக்கொடு அன்றியும் - மனம் கொண்டு சிந்தித்துப் பார்க்காமலேயே; வறியனை வழங்கினை - பொருளற்ற வெறும் சொற்களைக் கூறினாய்; வானோர் சினக்கொடும்படை - தேவர்களின் சினம்மிக்க கொடிய படைகள் எல்லாம்; செருக்களத்து என்னை என்ன செய்த - போர்க்களத்திலே என்னை என்ன செய்து விட்டன? எனக்கு நிற்க - எனக்கு இருக்கட்டும்; மற்று என்னொடு இங்கு ஒருவயிற்று உதித்த - என்னுடனே இங்கே ஒரு வயிற்றிலே தோன்றிய; உனக்கு - (என் உடன்பிறந்தவனான) உனக்கு; மானிடர் - அந்த மனிதர்கள்; வலியர் ஆம் தகைமையும் உளதோ - வலிமை மிக்க தன்மையர் ஆவதுண்டோ?

வறியன பொருள் இல்லாத வெற்றுரை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Without thinking it over, you have handed out empty words. The fierce, cruel weapons of the gods,
  2. what did they ever do to me on the battlefield?
  3. Leave me aside: even for you, born here of the same womb as I,
  4. can those men be a match in strength?

What the poem says

Irāvaṇaṉ points out that the gods' weapons never harmed him in battle. Then he turns the insult on Vīṭaṇaṉ: even he, as Irāvaṇaṉ's full brother, ought to be more than a match for mere humans, so his fear is shameful.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉakkoṭu aṉṟiyum vaṟiyaṉa vaḻaṅkiṉai; vāṉōr
ciṉak koṭum paṭai cerukkaḷattu eṉṉai eṉ ceyta?
eṉakku niṟka; maṟṟu eṉṉoṭu iṅku oru vayiṟṟu utitta
uṉakku māṉiṭar valiyar ām takaimaiyum uḷatō?