கம்பராமாயணம் 6216 · யுத்த 2.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை - சொல்லத் தகுந்த சொற்களை நீ தெரிந்து சொல்லவில்லை; பன்முறை தோற்று - (நமது பகைவர்கள் என்னுடன் போர் செய்து) பலமுறை தோற்றும்; வெல்லும் ஆற்றலும் ஒரு முறை இலை - என்னை வெற்றி கொள்ளும் வலிமையை ஒருமுறையும் கூட அவர்கள் பெறவில்லை; விண்ணைக்கல்லும் ஆற்றல் - விண்ணுலகத்தையே பெயர்த்து எறியத்தக்க ஆற்றலுடைய, என் கிளையையும் என்னையும் - எனது உறவினர்களையும் என்னையும்; களத்தில் கொல்லும் மாற்றலர் - போர்க்களத்தில் கொல்லத்தக்க பகைவர்கள்; உளர் எனக் கோடலும் கொண்டாய் - உள்ளனர் என்று எண்ணிக் கொண்டாய்.
மாற்றம்- சொற்கள். ஒருமுறை பெறவிலை - பெறவில்லை. கல்லுதல்- தோண்டுதல் (கிளறுதல்) விண்-விண்ணுலகம். கிளை - உறவினர். கொல்லும் மாற்றலர் என்பது கொல்லும் ஆற்றலர் எனவும் பொருள் கொள்ள நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You do not know what words to speak. Though beaten many times,
- not once have they gained the strength to win. Have you
- really come to believe there are foes who could kill on the battlefield
- me and my kin, whose might could dig up heaven itself?
What the poem says
Irāvaṇaṉ says the gods have lost to him many times and never once won. That his own brother could imagine any enemy able to kill him and his family, who could tear up heaven, shows that Vīṭaṇaṉ does not know how to speak.