கம்பராமாயணம் 6217 · யுத்த 2.105

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேவரின் பெற்ற வரத்தினது என் பெருஞ் செருக்கேல்
மூவரில் பெற்றம் உடையவன் தன்னொடு முழுதும்
காவலின் பெற்ற திகிரியோன் தன்னையும் கடந்தது
ஏவரில் பெற்ற வரத்தினால்? இயம்புதி இளையோய்!

பொருள் · Meaning in Tamil

இளையோய் - இளையவனே! தேவரின் பெற்ற வரத்தினது - தேவர்களிடம் நான் பெற்ற வரத்தினால் அமைந்தது; என் பெரும் செருக்கேல் - எனது பெரிய வலிமை என்பாயாயின்; மூவரில் - முதற் கடவுள் மூவரில்; பெற்றம் உடையவன் தன்னொடும் - காளையை ஊர்தியாக உடைய சிவபிரானுடனும்; முழுதும் காவலின் பெற்ற - உலகம் முழுவதையும் காக்கும் திறம்பெற்ற; திகிரியான் தன்னொடும் - சக்கரப் படையை உடைய திருமாலுடனும்; கடந்தது - (செய்த போரிலே) வெற்றி பெற்றது; ஏவரின் பெற்ற வரத்தினால் - ஏவரிடம் பெற்ற வரத்தால்; இயம்புதி - கூறுவாயாக.

வயதில் மாத்திரமல்லாது அறிவிலும் இளையவன் என்பது தோன்ற 'இளையோய்' என அழைத்தான். முதற்கடவுளர் மூவர் அரன் அரி அயன் என்போர். பெற்றம்-காளை. 'காவலின் பெற்ற திகிரி' என்றது 'சக்கரப்படை' உலகம் காக்க வல்லது என்பதை உணர்த்தும். கடத்தல் என்றது எதிர்நின்று போர்செய்து வெல்லுதல் (புறநா.8)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If you say my great might comes from boons I got from the gods,
  2. then when I overcame the one of the three who owns the bull,
  3. and the discus-bearer who has the guarding of the whole world,
  4. from whose boon did that come? Tell me, little brother!

What the poem says

Irāvaṇaṉ insists his victories are his own. He claims to have stood against Śiva, who rides the bull, and Viṣṇu, the discus-bearing protector of the world, two of the three supreme gods. No boon could explain that. Calling Vīṭaṇaṉ "little brother" implies he is young in wisdom as well as age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvariṉ peṟṟa varattiṉatu eṉ peruñ cerukkēl
mūvaril peṟṟam uṭaiyavaṉtaṉṉoṭum muḻutum
kāvaliṉ peṟṟa tikiriyāṉtaṉṉoṭum kaṭantatu
ēvariṉ peṟṟa varattiṉāl? iyamputi iḷaiyōy!