கம்பராமாயணம் 6219 · யுத்த 2.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரங்கில் ஆடுவார்க்கு - அம்பலத்திலே நடனமாடுகின்ற சிவபிரானுக்கு; அன்பு பூண்டு உடை வரம் அறியேன் - அன்பு கொண்டு அதனால் பெற்ற வரபலமுடையவன் என்பதனை அறியாதவனாய்; இரங்கியான் நிற்ப - வாலியுடன் செய்த போரில் மனம் கலங்கி நான்நிற்க; என் வலி அவன் வயின் எய்த - எனது வலிமை அவனிடம் செல்ல; வரம் கொள் வாலிபால் தோற்றனென் - எதிர்த்தவர் பலம் தனக்கு வரவேண்டும் என்று வரம் பெற்றிருந்த வாலியிடம் நான் தோல்வியுற்றேன்; மற்றும் வேறுள குரங்கெலாம் - இதனால் மற்றுமுள்ள குரங்குகள் எல்லாமே; எனைவெல்லும் என்று எங்ஙனம் கோடி - என்னை வென்று விடும் என்று எப்படிக் கொள்ளுவாய்?
வலி-பலம். வயின்-இடம். இராவணன் வாலிபால் தோற்று, வாலால், கட்டுண்ட செய்தி உத்தரகாண்டத்தில் உள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not knowing the boon he had won through devotion to the one who dances on the stage,
- while I stood troubled and my strength passed over into him,
- I was beaten by Vālī with his boon; how can you conclude
- that all the other monkeys there are will defeat me too?
What the poem says
Irāvaṇaṉ explains away his defeat by Vālī. Vālī, a devotee of Śiva, the dancer in the hall, had a boon that drew half of any opponent's strength into himself. That was a special case, not proof that any monkey could beat him.