கம்பராமாயணம் 6220 · யுத்த 2.108
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீலகண்டனும் - நீல நிறமான கழுத்தை உடைய சிவனும்; நேமியும் - சக்கராயுதத்தை உடைய திருமாலும்; நேர் நின்று நேரின் - நேருக்கு நேர் நின்று பொருதால்; ஏலும் அன்னவருடை வலி - எதிர்க்கும் அவர்களது வலிமையும்; அவன் வயின் எய்தும் - அந்த வாலியிடம் சேர்ந்து விடும்; சாலும் நல்வரம் நினைந்து - மிக்க அந்த நல்ல வரத்தை நினைத்தே; அம்மனிதனும் - நீ சொன்ன அந்த மனிதனாகிய இராமனும்; அவன் எதிர் செலல் தவிர்ந்து - அவனுக்கு எதிரிலே சென்று நின்று போரிடுவதைத் தவிர்த்து; வாலிதன்னை - அந்த வாலியை; மறைந்து நின்று எய்தான் - மறைந்து நின்று அம்பெய்து கொன்றான்.
நேமி-சக்கரம், இங்கு அப் படை கொண்ட திருமாலைக் குறித்து நின்றது. நேரின்- எதிர்த்தால். ஏலும்-எதிர்க்கும். எதிர்த்தவர் பலத்தில் பாதி வாலிபால் எய்தும் என்பதனை 'கிட்டினார் பொரக்கடைக்கின் அன்னவர் பட்ட நல்வலம் பாதி எய்துவான்” (3825) என்று முன்னும் கூறுதல் காணலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even if the Blue-throated One and the Discus-bearer stood against him face to face,
- the strength of those who oppose him would pass into him;
- thinking of that mighty boon, that man avoided going before him
- and shot Vālī while standing hidden.
What the poem says
Irāvaṇaṉ uses Vālī's boon to belittle Irāmaṉ. Even Śiva, whose throat is blue from swallowing poison, or Viṣṇu would lose half their power facing Vālī; so Irāmaṉ, the "man" Vīṭaṇaṉ praises, did not dare face him and shot him from hiding. This refers to the famous, much-debated killing of Vālī in the Kiṣkindhā book.