கம்பராமாயணம் 6221 · யுத்த 2.109

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஊன வில் இறுத்து, ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டிக்
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி,
யான் இழைத்திட இல் இழந்து இன் உயிர் சுமக்கும்
மானிடன் வலி நீ அலாது ஆர் உளர்? மதித்தார்.

பொருள் · Meaning in Tamil

ஊனவில் இறுத்து - ஏற்கனவே ஊனமான வில்லை முறித்து; ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டி - ஓட்டை மரத்திலே அம்பு செலுத்தி; கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து - கூனி செய்த சூழ்ச்சியினால் ஆட்சியை இழந்து; உயர்வனம் குறுகி - உயர்ந்த மரங்கள் நிறைந்த வனம் அடைந்து; யான் இழைத்திட இல் இழந்து - நான் செய்த செயலால் மனைவியை இழந்து; இன் உயிர் சுமக்கும் - இன்னுயிரைச் சுமந்து திரியும்; மானுடன் வலி - ஒரு மனிதனுடைய வலிமையை; நீ அலாது - உன்னை அல்லாமல்; யார் உளர் மதித்தார் - மதித்தவர்கள் வேறு யாருள்ளார்?

ஊனம் - குறைபாடு. மிதிலையில் வில்லை ஒடித்ததும், மராமரத்தை அம்பெய்து துளைத்ததும் இராமன் செய்த அரிய செயல்கள் எனப் பிறர் புகழ்ந்து கூற, அதனை இகழ்ந்து ஊனவில், ஓட்டைமரம் என இராவணன் பேசுவது அவனது வெறுப்பைக் காட்டுவதாகும். என்னால் மனைவியை இழந்து, உயிர் சுமந்து திரியும் இராமனை உன்னை அன்றி மதித்தவர் வேறு யார் இருக்கிறார்கள் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Who broke a bow already flawed, who drove an arrow through trees already holed,
  2. who lost his kingdom by the hunchback's plotting and came to the high forest,
  3. who lost his wife through what I contrived and still carries on his sweet life:
  4. who but you has ever thought much of this man's strength?

What the poem says

Irāvaṇaṉ belittles each of Irāmaṉ's famous deeds. Breaking Śiva's bow at Mithilā becomes snapping a damaged bow; piercing the seven sāla trees becomes shooting through trees that were already hollow. Irāmaṉ lost his throne through the hunchbacked maid Kūṉi's scheme and his wife through Irāvaṇaṉ's own trick. Only Vīṭaṇaṉ, he sneers, could rate such a man highly.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṉa vil iṟuttu, ōṭṭai mā marattuḷ ampu ōṭṭi
kūṉi cūḻcciyāl aracu iḻantu uyar vaṉam kuṟuka,
yāṉ iḻaittiṭa il iḻantu iṉ uyir cumakkum
māṉuṭaṉ vali nī alātu yār uḷar? matittār.