கம்பராமாயணம் 6223 · யுத்த 2.111

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தன்னின் முன்னிய பொருள் இலா ஒருதனித் தலைவன்
அன்ன மானிடன் ஆகிவந்து, அவதரித்து அமைந்தான்
சொன்ன நம்பொருட்டு உம்பர்தம் சூழ்ச்சியின் துணிவால்
இன்னம் ஏகுதிபோலும் என்று அடி தொழுது இரந்தான்.

பொருள் · Meaning in Tamil

தன்னின் முன்னிய பொருள் இலா - தன்னை விடச்சிறந்த பொருள் வேறொன்றில்லாத; ஒரு தனித்தலைவன் - ஒப்பற்ற தலைவனாகிய திருமாலே; உம்பர் தம் சூழ்ச்சியின் துணிவால் - தேவர்களின் ஆலோசனை முடிவின்படி; சொன்னநம் பொருட்டு - அந்தத் தேவர்களெல்லாம் தீயவர் என்று கூறிய நம்மை அழிக்கும் பொருட்டு; அன்ன மானுடன் ஆகி வந்து - அந்த மானிடனான இராமனாக வந்து; அவதரித்து அமைந்தான் - அவதாரம் செய்து நம்முடன் போர் செய்ய அமைந்தான்; இன்னம் ஏகுதி போலும் - இதனைத் தெரிந்த பின்னும் போருக்குச் செல்வாய் போலும்; என்று அடி தொழுது இரந்தான் - என்று இராவணன் அடிகளில் வணங்கி யாசித்துக் கூறினான்.

முன்னிய-சிறந்த. ஒருதனித்தலைவன்-ஒப்பற்ற தலைவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The one sole lord, beyond whom there is nothing higher,
  2. has come as that man and taken birth among us,
  3. for our sakes, whom the gods have named as evil, by the resolve of their council.
  4. Will you still go to war? So he begged, bowing at his feet.

What the poem says

Vīṭaṇaṉ now says it outright: Irāmaṉ is the supreme god Viṣṇu, born as a man at the gods' request in order to destroy the demons. He bows at Irāvaṇaṉ's feet and pleads with him not to go to war against God.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉṉiṉ muṉṉiya poruḷ ilā oru taṉit talaivaṉ
aṉṉa māṉuṭaṉ āki vantu, avatarittu amaintāṉ
coṉṉa namporuṭṭu umpartam cūḻcciyiṉ tuṇivāl
iṉṉam ēkuti pōlum eṉṟu aṭi toḻutu irantāṉ.