கம்பராமாயணம் 6224 · யுத்த 2.112
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அச்சொல் கேட்டு - வீடணன் கூறிய அந்தச் சொற்களைக் கேட்டு; அவன் ஆழியான் என்றனை - அந்த இராமனை சக்கரப்படையை உடைய திருமாலின் அவதாரம் என்றாய்; ஆயின் கொச்சைத் துன்மதி - அப்படியானால் இழிந்த துர்புத்தி உடைய அவன்; எத்தனை போரிடைக் குறைந்தான் - என்னுடன் செய்த எத்தனை போர்களிலே தோற்றான். இச்சைக்கு ஏற்றன - எனது விருப்பத்துக்கேற்றவைகளையே; யான் செய்த இத்தனைகாலம் - நான் செய்து கொண்டிருந்த இத்தனை காலமும்; அம்முழு முதலோன் - நீமுழு முதல்வன் எனக்கூறும் அவன்; முச்சு அற்றான் கொல்- மூச்சற்றவனாக இருந்தான் போலும்; என முனிந்தான் - என்று கூறி இராவணன் வீடணனைச் சினந்தான்.
ஆழியான் - சக்கரப்படையுடைய திருமால். கொச்சை- இழிந்த. துன்மதி- கெட்டபுத்தி. குறைந்தான்-தோல்வியுற்றான். இச்சை- விருப்பம். அற்றான் - இறந்தனனோ என்பது பொருள். முச்சு: மூச்சு என்பதன் குறுக்கல் விகாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing those words, he said, If you say he is the Lord of the Discus,
- then in how many battles has that vile, wicked one been worsted?
- All this time I have done whatever pleased me;
- was that First Being out of breath? So he raged.
What the poem says
Irāvaṇaṉ is furious. If Irāmaṉ is Viṣṇu, then Viṣṇu has lost to him many times, and while Irāvaṇaṉ did as he pleased for ages, the supposed supreme being did nothing. Was he dead, then? The sarcasm shows he cannot accept any power above his own.