கம்பராமாயணம் 6226 · யுத்த 2.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிவனும் நான்முகத்து ஒருவனும் - சிவபெருமானும், நான்கு முகங்களை உடைய ஒருவனான பிரமனும்; திருநெடுமாலாம் அவனும் -திருமகள் நாயகனான திருமாலாகிய அவனும்; மற்று உள அமரரும் - மற்றும் உள்ள தேவர்கள் அனைவரும்; உடன் உறைந்து அடங்க - எனது ஆட்சியில் ஒரு சேர அடங்கி இருக்க; புவனம் மூன்றும் நான் ஆண்டுளது - மூன்று உலகங்களையும் நான் ஆட்சி செய்து வந்துள்ளது; ஆண்ட அப்பொரு இல் உவன்- மூவுலகத்தையும் ஆண்ட அந்த ஒப்பில்லாதவனான அவன்; இலாமையினோ - இல்லாமையினால்; (அல்லது) வலி ஒதுங்கியோ - எனது வலிமைக்கு முன் நிற்கமாட்டாது ஒதுங்கி இருந்து விட்டதாலோ? உரையாய் - நீ கூறுவாயாக.
'ஆண்ட அப்பொருவில் வில்' எனப் பிரித்து கையாண்ட அந்தப் போரிட வல்ல வில்லை (சார்ங்கம்) உடையவன் எனக் கூறினும் பொருந்தும். உவன்: என்பது சுட்டு. (இடை) திருநெடுமால் என்ற சிறப்புக்குரிய பெயரை இராவணன் எள்ளுதற் குறிப்போடு சொல்லினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Śiva, the four-faced one, the one who is great Tirumāl of Śrī,
- and all the other gods lived submissive under me together
- while I ruled the three worlds; was that because the matchless one who once ruled them
- was not there? Or did he shrink from my strength? Tell me.
What the poem says
Irāvaṇaṉ says he has ruled the three worlds with all the gods, even Śiva, Brahmā and Viṣṇu, under him. Either Viṣṇu did not exist or he hid from Irāvaṇaṉ's power; either way he is no threat. He uses Viṣṇu's honorific title mockingly.