கம்பராமாயணம் 6228 · யுத்த 2.116

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பித்தன் ஆகிய ஈசனும் மாலும் என் பெயர் கேட்டு
எய்த்த சிந்தையர்; ஏகுழி ஏகுழி எல்லாம்
கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும் முதுகில்
தைத்த வாளிகள் நின்று உள; குன்றின் வீழ் தடித்து இன்.

பொருள் · Meaning in Tamil

பித்தன் ஆகிய ஈசனும் அரியும் - பித்தனாகிய சிவபெருமானும், திருமாலும்; என் பெயர் கேட்டு - எனது பெயரைக் கேட்டவுடன்; எய்த்த சிந்தையர் - (அச்சத்தால்) சோர்ந்த மனத்தினராய்; ஏகுழி ஏகுழி எல்லாம் - அவர் சென்ற சென்ற இடமெல்லாம்; கைத்த ஏற்றினும் - சிவன் செலுத்திச் சென்ற காளை மீதும்; கடவிய புள்ளினும் - திருமால் ஏறிச் சென்ற கருடன் மீதும்; முதுகில் தைத்த வாளிகள் நின்று - நான் எய்த பாணங்கள் முதுகில் தைத்து நின்ற வடுக்கள்; குன்றின் வீழ் தடித்தின் உள - மலைமீது விழுந்த இடிபோல் உள்ளன அன்றோ?

எய்த்த-சோர்ந்த. ஏகுழி-செல்லுமிடம். கைத்த ஏறு-செலுத்திய காளை. உகைத்த என்ற சொல் முதல் (எழுத்து) குறைந்து கைத்து என நின்றது. கடவிய புள்- செலுத்திய கருடன். தடித்து-இடி. வாளிகள் இங்கு அம்புகளால் ஆன வடுக்களைக் குறித்தது. இடி விழுந்த மலையில் சிதைந்த இடிபாடுகள் காணப்படுவன போல அம்புபட்ட வடுக்கள் காணப்பட்டன என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mad lord Īcaṉ and Ari, hearing my name,
  2. grew faint at heart; wherever they went,
  3. on the bull that one drove and on the bird the other rode, on their backs
  4. the arrows I lodged still stand, like thunderbolts fallen on a mountain.

What the poem says

Irāvaṇaṉ boasts that Śiva, called the madman for his wild ways, and Ari, that is Viṣṇu, fled in fear at his name. His arrows struck their mounts, Śiva's bull and Viṣṇu's Garuḍa, in the back as they ran, leaving scars like the marks of lightning on a mountainside. Wounds in the back are a sign of retreat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pittaṉ ākiya īcaṉum ariyum eṉ peyar kēṭṭu
eytta cintaiyar; ēkuḻi ēkuḻi ellām
kaitta ēṟṟiṉum kaṭaviya puḷḷiṉum mutukil
taitta vāḷikaḷ niṉṟu uḷa; kuṉṟiṉ vīḻ taṭittiṉ.