கம்பராமாயணம் 6229 · யுத்த 2.117
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெஞ்சினம் தரு போரின் - கொடிய சினத்தை உண்டாக்கும் போரிலே பங்குகொள்ள; எம்முடன் எழ வேண்டா - நீ எங்களோடு புறப்படவேண்டா; இஞ்சி மாநகர் இடம் உடைத்து - மதில் சூழ்ந்த மாநகராகிய இலங்கையில் நிறைய இடமிருக்கிறது; ஈண்டு இனிது இருத்தி- இங்கு நீ இனிதே தங்கி இருப்பாயாக; அஞ்சல் அஞ்சல் என்று - அஞ்சாதே, அஞ்சாதே என்று கூறி; நஞ்சின் வெய்யவன் - கொடிய விடத்தினும் கொடியவனான இராவணன்; அருகு இருந்தவர் முகம் நோக்கி - அருகில் இருந்த அமைச்சர் முதலானவர்களின் முகத்தைப் பார்த்து; கை எறிந்து - கையோடு கையைக் கொட்டி; உரும் என நக்கான் - இடி இடித்தது போலச் சிரித்தான்.
அஞ்சல்! அஞ்சல்! என்ற அடுக்குத் தொடர் எள்ளுதற் குறிப்புடையது. 'மாநகர் இடம் உடைத்து' போதுமான அளவு நிறைய இடம் இருக்கிறது என்றது ஏளனமாகக் கூறியதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You need not rise with us for battle that breeds fierce anger;
- this great walled city has room enough; stay here in comfort.
- Have no fear! Have no fear! So saying, looking at the faces of those around him,
- he who was crueller than poison clapped his hands and laughed like thunder.
What the poem says
Irāvaṇaṉ mocks Vīṭaṇaṉ as a coward. He tells him to stay safely at home in the city, which has plenty of room for the timid, and says "Don't be afraid" twice in derision. Then he looks round at his ministers and claps and roars with laughter.