கம்பராமாயணம் 6230 · யுத்த 2.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பின்னும் வீடணன் - இராவணன் கூறியதைக் கேட்டபின்பு வீடணன்; ஐய - தலைவனே; நின்தரம் அலாப் பெரியோர் - உன் அளவினர் அல்லாத பெரியோர் பலர்; முன்னை நாள் - மிக முற்பட்ட காலத்திலே; இவன் முனிந்திட - இந்தத் திருமால் கோபம் கொண்ட காரணத்தால்; கிளையொடும் முடிந்தார்- உற்றார் உறவினரோடு அழிந்தார்கள்; இன்னம் உண்டு யான் இயம்புவது - இன்னும் உனக்கு நான் சொல்ல வேண்டிய தொன்றுண்டு; இரணியன் என்பான் தன்னை - இரணியன் என்று சிறப்பித்துக் கூறப்படுபவனது செய்தியை; உள்ளவா கேட்டி - உள்ளபடியே நான் கூறக் கேட்பாயாக; என்று உரை செயச் சமைந்தான் - என்று கூறுவதற்கு அமைந்தான்.
நின்தரம்- உன்னளவு. உன்னைவிட அறிவு ஆற்றல்களில் மேம்பட்ட என்பது கருத்து. உள்ளவா-உள்ளவாறு என்பதன் விகாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then Vīṭaṇaṉ said, Sire, great ones far beyond your measure
- in days of old perished with all their kin when this one grew angry.
- There is still more I must tell you: of the one called Iraṇiyaṉ,
- hear how it truly was. So he set himself to speak.
What the poem says
Undeterred, Vīṭaṇaṉ offers a cautionary tale. Others greater than Irāvaṇaṉ have been destroyed with their whole families when Viṣṇu turned against them. He begins the story of Iraṇiyaṉ, Hiraṇyakaśipu, which fills the next chapter: the demon king who hated Viṣṇu and was slain by him in the form of the Man-Lion, Narasiṃha.