கம்பராமாயணம் 6231 · யுத்த 3.1

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான்;
போதம் கண்ணிய வரம் அவன் தரக் கொண்டு போந்தான்;
காதும் கண்ணுதல், மால், அயன், கடைமுறை காணாப்
பூதம் கண்ணிய வலி எலாம் ஒருதனி பொறுத்தான்.

பொருள் · Meaning in Tamil

வேதம் கண்ணிய பொருள் எலாம் - (இரணியனுக்கு) வேதங்கள் குறித்த எல்லாப் பொருள்களையும்; விரிஞ்சனே ஈந்தான் - பிரமதேவனே (குருவாக) அறிவித்தான்; போதம் கண்ணிய - சிறந்த ஞானத்தால் தான் கருதிய; வரம் எலாம்தர - எல்லா வரங்களையும் அப்பிரமனேதர; கொண்டு போந்தான் - பெற்றுக் கொண்டு வந்தான்; காதும் கண்ணுதல் - உயிர்களை எல்லாம் அழிக்கவல்ல நெற்றிக் கண்ணனாகிய சிவனும்; மலர் அயன் - தாமரை மலரில் உறையும் பிரமனும்; கடைமுறை காணாப் பூதம்- முடிவு காணமுடியாத ஐம்பெரும் பூதங்களும், கண்ணியவலிஎலாம் - கொண்டுள்ள வலிமை எல்லாம்; ஒரு தனி பொறுத்தான் - தான் ஒருவனே தாங்குவனானான்.

வேதம் கண்ணிய பொருள் - வேதங்களின் உட்பொருள். விரிஞ்சன் - பிரமன். வேதங்களைப் படைத்த வேதாவாகிய பிரம்மாவே இரணியனுக்கு வேத உண்மைகளை அறிவித்தான் என்ற சிறப்பை 'ஏகாரம்' உணர்த்தும். காதும்- அழிக்கும்; சங்கார காரணன் சிவன் என்பதை 'காதும் கண்ணுதல்' என்பது குறித்தது. கடைமுறை - கடைசி எல்லை. சிவன், பிரமன், பூதங்கள் கொண்டுள்ள வலிமையெல்லாம் இரணியன்தான் ஒருவனே பெற்றிருந்தான் என்றார். பொறுத்தல் - தாங்குதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All that the Vedas intend, Viriñcaṉ himself taught him;
  2. every boon his wisdom sought he received and carried off;
  3. all the strength held by the destroying god with the eye in his forehead, by Ayaṉ on the flower,
  4. and by the elements whose end no one sees, he alone bore.

What the poem says

The story of Iraṇiyaṉ begins. Brahmā, also called Viriñcaṉ and Ayaṉ, taught him the meaning of the Vedas in person and granted him every boon he wanted. In himself he held all the power of Śiva the destroyer, of Brahmā the creator and of the five elements.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vētam kaṇṇiya poruḷ elām viriñcaṉē īntāṉ;
pōtam kaṇṇiya varam elām tarak koṇṭu pōntāṉ;
kātum kaṇṇutal, malar ayaṉ, kaṭaimuṟai kāṇāp
pūtam kaṇṇiya vali elām oru taṉi poṟuttāṉ.