கம்பராமாயணம் 6232 · யுத்த 3.2

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும், அயனும்,
கற்றை அம் சடைக் கடவுளும் காத்து, அளித்து, அழிக்கும்
ஒற்றை அண்டத்தின் அளவனோ? அதன்புறத்து உலவா
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் - எந்நாளும் அழியாது உள்ளவன் என்று கூறத்தக்க இறைவனான திருமாலும்; அயனும் - படைப்புக் கடவுளான பிரமதேவனும்; கற்றை அம் சடைக்கடவுளும் - அழகிய சடைக் கற்றையை உடையசிவனும்; காத்து, அளித்து, அழிக்கும் - முறையே படைத்து, காத்து, அழிக்கின்றதாகிய; ஒற்றை அண்டத்தின் அளவினோ - இந்த ஒரு அண்டத்தின் அளவில் மட்டுமோ? அதன் புறத்து உலவா - இந்த அண்டத்துக்குப் புறத்திலும் எண்ணற்றனவாக உள்ள; மற்றை அண்டத்தும் - வேறு வேறு அண்டங்களிலும், தன்பெயரே சொல - (வாழ்பவரெல்லாம்) தனது பெயர் ஒன்றினையே (புகழ்ந்து) பேசுமாறு; வாழ்ந்தான் - இரணியன் வாழ்ந்து வந்தான்.

எற்றை நாளினும் - எந்த ஊழிக் காலத்தும் என்பது பொருள். இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன் என, திருமாலைச்சுட்டி நின்றது (விஷ்ணு என்ற வடமொழிச் சொல் இதே பொருளை உடையது)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Was it only in the one cosmic egg that the Lord who is said to exist in every age,
  2. Ayaṉ, and the god with the beautiful mass of matted hair
  3. protect, create and destroy? In the endless other worlds beyond it too
  4. he lived so that all spoke his name alone.

What the poem says

Iraṇiyaṉ's rule was not limited to our universe, which Viṣṇu, Brahmā and Śiva preserve, create and destroy. In the countless universes beyond it, too, every being praised his name alone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṟṟai nāḷiṉum uḷaṉ eṉum iṟaivaṉum, ayaṉum,
kaṟṟai am caṭaik kaṭavuḷum kāttu, aḷittu, aḻikkum
oṟṟai aṇṭattiṉ aḷaviṉō? ataṉ puṟattu ulavā
maṟṟai aṇṭattum taṉ peyarē cola vāḻntāṉ.