கம்பராமாயணம் 6233 · யுத்த 3.3

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பாழி வன் தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக்கைப்
பூழி வன்கரி இரண்டு இருகை கொடு பொருத்தும்;
ஆழம் காணுதற்கு அரியவாய், அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இருதாள் அளவு எனக் கடந்து ஏறும்.

பொருள் · Meaning in Tamil

பாழி வன் தடந்திசை - அகன்ற, வலிய, பெரியதிசைகளை; சுமந்து ஓங்கிய பணைக்கை - சுமந்து உயர்ந்த பருத்த தும்பிக்கைகளில் எல்லாம்; பூழை வன் கரி - உள்துளை உடைய வன்மை மிகுந்த திக்குயானைகளில்; இரண்டு இருகைக் கொடு பொருத்தும் - இரண்டினைத் தனது இரண்டு கைகளிலும் கொண்டு மோத விடுவான்; ஆழம் காணுதற்கு அரியவாய் - ஆழத்தை அளந்தறிய இயலாதனவாகிய; அகன்ற பேர் ஆழி ஏழும்- விசாலமான ஏழு கடல்களையும்; தன் இரு தாள் அளவென - தனது இருபாதங்களின் அளவு உடையன என்னும்படி; கடந்து ஏறும் - கடந்து கரை ஏறுவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Two of the mighty elephants with hollow trunks like tree trunks, who stand tall bearing up
  2. the vast strong directions, he would take in his two hands and dash together;
  3. the seven wide oceans, whose depth none can fathom,
  4. he would cross and climb out of as if they came only to his two feet.

What the poem says

More of Iraṇiyaṉ's might: he plays with the elephants that hold up the corners of the world, knocking them together, and wades through the seven oceans as if they were ankle-deep.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pāḻi vaṉ taṭan ticai cumantu ōṅkiya paṇaik kaip
pūḻai vaṉ kari iraṇṭu iru kaikkoṭu poruttum;
āḻam kāṇutaṟku ariyavāy, akaṉṟa pēr āḻi
ēḻum taṉ iru tāḷ aḷavu eṉak kaṭantu ēṟum.