கம்பராமாயணம் 6234 · யுத்த 3.4

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வண்டல் தெண்திரை ஆற்றுநீர் சில என்று மருவான்;
கொண்டல் கொண்டநீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான்;
பண்டைத் தெண்திரைப் பரவை நீர் உவர் என்று படியான்;
அண்டத்தைப் பொதுத்து அப்புறத்து அப்புனல் ஆடும்.

பொருள் · Meaning in Tamil

வண்டல் தெண் திரை ஆற்று நீர்- வண்டலோடு கூடிய, தெளிந்த அலைகளையுடைய ஆற்று நீர்; சில என்று மருவான்- அளவில் சிறியதென்று அதன்பக்கம் செல்லான்; கொண்டல் கொண்டநீர்- மேகம் கொண்ட மழை நீரை; குளிர்ப்பு இல என்று அவை குடையான் - குளிர்ச்சி இல்லை என்று அதில் குளிக்க மாட்டான்; பண்டைத் தெண் திரைப் பரவை நீர்- பழமைவாய்ந்த தெளிந்த அலைகளை உடையகடல் நீர்; உவர் என்று படியான் - உப்புச்சுவையுடையது என்று குளிக்க மாட்டான்; அண்டத்தைப் பொதுத்து - அண்டத்தைத் துளை செய்து; அப்புறத்து அப்பினால் ஆடும் - பெரும்புறக் கடல் நீரால் நீராடுவான்.

"பண்டைத் தெண்திரைப் பரவை” கடலின் பழமையை உணர்த்தும். "தொன்று முதிர் பெளவம்” (புறம்-6) என்றது காண்க. பொதுத்தல் - துளைத்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. River water with its silt and clear waves he would not go near, finding it too little;
  2. the water the clouds hold he would not bathe in, finding it not cool enough;
  3. the ancient ocean with its clear waves he would not enter, because it is salt;
  4. he would pierce the cosmic shell and bathe in the waters beyond it.

What the poem says

Rivers are too small for Iraṇiyaṉ, rain is not cool enough and the sea is too salty. He bathes only in the cosmic waters outside the shell of the universe, breaking through it to get there.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vaṇṭal teṇ tirai āṟṟu nīr cila eṉṟu maruvāṉ;
koṇṭal koṇṭa nīr kuḷirppu ila eṉṟu avai kuṭaiyāṉ;
paṇṭait teṇ tiraip paravai nīr uvar eṉṟu paṭiyāṉ;
aṇṭattaip potuttu ap puṟattu appiṉāl āṭum.