கம்பராமாயணம் 6235 · யுத்த 3.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சாரும் மானத்தில் - சந்திரன் ஏறிச் செல்லும் விமானத்திலே (அமர்ந்து); சந்திரன் தனிப்பதம் - சந்திரனுக்குரிய சிறந்த ஆட்சி நடத்தி; சரிக்கும் - உலாவுவான்; தேரின் மேல் நின்று - சூரியனுக்குரிய தேரின்மீது நின்று; இரவிதன் பெரும்பதம் செலுத்தும் - சூரியனுக்குரிய ஆட்சியை நடத்துவான்; பேர்வு இல் எண் திசைக் காவலர் - பெயர்தல் இல்லாத எட்டுத்திசைதிக்குக் காவலர்களின்; கருமமும் பிடிக்கும் - தொழிலையும் ஒருவனே இயற்றுவான்; மேரு மால் வரை உச்சிமேல் - பெரிய மேரு மலையினது உச்சியின்மேல்; அரசு வீற்றிருக்கும் - பேரரசனாக வீற்றிருப்பான்.
கருமம் - தொழில், மானம் - விமானம். எண்திசைக் காவலர் - அட்டதிக்குப் பாலகர்கள் (இந்திரன் - அக்கினி - யமன் - நிருதி - வருணன் - வாயு - குபேரன் - ஈசானன்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the moon's own chariot he would move, holding the moon's unique office;
- standing on the chariot of the Sun he would carry out the Sun's great office;
- he would take over the work of the unmoving guardians of the eight directions;
- on the peak of great Mount Mēru he would sit enthroned.
What the poem says
Iraṇiyaṉ took over the duties of the cosmic powers himself: he drove the moon's car and the sun's chariot, did the work of the eight guardians of the directions, Indra, Agni, Yama and the rest, and ruled from the summit of Mount Mēru, the centre of the world.