கம்பராமாயணம் 6236 · யுத்த 3.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நிலனும் நீரும் - மண்ணும், தண்ணீரும்; வெங்கனலொடு - வெப்பம் மிக்க நெருப்புடனே; காலும் ஆய் - காற்றும் ஆகி; நிமிர்ந்த தலனுள் நீடிய அவற்றின் - எங்கும் பரவிய இவ்வண்டத்திலே நிலைபெற்றுள்ள அவைகளின்; அத்தலைவரை மாற்றி- தலைவர்களாய் இருப்பவர்களை மாற்றி; உலவும் காற்றொடு - உலாவுகின்ற காற்றுடனே (வாயுதேவன்); கடவுளர் பிறருமாய் - மற்ற தெய்வங்களும்தானேயாக; உலகின் வலியும் செய்கையும் - உலகத்தின் வலிமையும் அதன் காரியமும்; வருணன்தன் கருமமும் - வருணனுக்குரிய தொழிலும்; மாற்றும் - (ஆகியவைகளை - ஒருவர் செய்வதை மற்றவர் செய்யுமாறு) மாற்றி விடுவான்.
வெம்மை + கனல் - வெங்கனல். தலன்- தலம் (அண்டம்) நீடிய - நிலைபெற்ற. அவற்றின் - அவ்வைம் பூதங்களின். நிமிர்ந்த - பரவிய.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Becoming earth and water, with fierce fire and wind,
- he displaced the lords of those elements that endure throughout the vast world;
- becoming the wandering wind and the other gods too, he would change around
- the world's forces and workings and the duties of Varuṇaṉ.
What the poem says
Iraṇiyaṉ pushed aside the gods who preside over the elements and took their places himself. He became the wind god and others, and reassigned the powers and tasks of the universe, including those of Varuṇaṉ, lord of the waters, at his whim.