கம்பராமாயணம் 6237 · யுத்த 3.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாமரைத்தடங் கண்ணினான் - செந்தாமரை மலர் போன்ற விசாலமான கண்களையுடைய திருமாலின்; பேர் அவை தவிர - திருநாமம் ஒன்றைத்தவிர; உலகங்கள் யாவையும் - எல்லா உலகத்தில் உள்ளவர்களும்; நாமம் தன்னதே நவில - தன்னுடையநாமம் ஒன்றினையே கூற; தூம வெங்கனல் - புகையுடன் கூடிய வெம்மையான யாகத் தீயிலே; அந்தணர் முதலினர் சொரிந்த - அந்தணர் முனிவர் ஆகியோர் பெய்த; ஓம வேள்வியின் - ஓமப் பொருள்களை உடையயாகத்திலே; இமையவர் பேறு எலாம் உண்ணும் - தேவர்களுக்குரிய அவி உணவை எல்லாம்தானே உண்பான்.
தாமரைத்தடம் கண்ணினன் - திருமால். பேர் எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய நம:) என்பது. வேதங்களால் சிறப்பித்துப் பேசப்படும் இத்திரு மந்திரம் மிகப்பழங்காலத்திலிருந்தே தேவர் மக்கள் எல்லோரும் நாளும் ஓதிவந்த பெருமை உடையது. தேவர்களைக் குறித்துச் செய்யப்பட்ட யாகங்களில் சொரிந்த அவியுணவை எல்லாம் தானே நுகர்ந்தான். "அரணியன்றனகல்வேள்வி ஆகுதி செய்புவி அனைத்தும், இரணியன தெனும் வார்த்தை இந்நெடு நாள் கேட்டிலையோ" என்ற இரணியவதைப் பரணி நினைதற்குரியது. இமையவர் பேறு - அவி உணவு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Except for the names of the one with wide lotus eyes,
- all the worlds were to speak only his own name,
- and in the fire sacrifices where Brahmins and others poured oblations into the smoky blazing flame
- he would eat the whole portion owed to the gods.
What the poem says
Iraṇiyaṉ forbade the name of Viṣṇu, the lotus-eyed god, and made the whole world chant his own name instead. He also took for himself the offerings that priests poured into the sacrificial fire for the gods, so the gods went hungry.