கம்பராமாயணம் 6238 · யுத்த 3.8

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'காவல், காட்டுதல், துடைத்தல், என்று இத்தொழில் கடவ
மூவரும் அவை முடிக்கிலர், பிடிக்கிலர் முறைமை;
ஏவர் மற்றவர்? யோக்கியர் உறுபதம் இழந்தார்;
தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார்.

பொருள் · Meaning in Tamil

காவல், காட்டுதல், துடைத்தல் என்று - காத்தல், படைத்தல், அழித்தல் என்று கூறப்படும்; இத்தொழில் கடவ மூவரும் - இந்த முத் தொழிலைப் புரிந்து வந்த பிரமன், திருமால், சிவன் ஆகிய மூவரும்; அவை முடிக்கிலர் - தமக்குரிய அத்தொழில்களைச் செய்து முடிக்க மாட்டாதவராய்; முறைமை பிடிக்கிலர்- தமக்குரிய முறையைக் கடைப்பிடிக்காதவர் ஆயினர்; ஏவர் மற்றவர் - (மும்மூர்த்திகளின் நிலையே இதுவானால்) மற்றவர் எவர் அவனைவெல்லவல்லார்; யோகியர் உறுபதம் இழந்தார் - யோகிகள் எல்லோரும் கூட தமது பதவிகளை இழந்தனர்; தேவரும் அவன்தாள் அலால் - தேவர்கள் கூட, அவனுடைய பாதங்களைத் தவிர; அர்ச்சனை செய்யார் - வேறு எவரையும் பூசிக்க மாட்டார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Guarding, bringing forth, and wiping away: the three whose duty these tasks are
  2. could no longer complete them nor keep to their proper order;
  3. who then were the others? The yogis lost the stations they had won;
  4. even the gods worshipped no feet but his.

What the poem says

Under Iraṇiyaṉ even the three great gods, who preserve, create and destroy the world, could not do their work. If they were helpless, what of lesser beings? Ascetics lost the heavenly ranks their merit had earned, and the gods themselves worshipped him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kāval, kāṭṭutal, tuṭaittal, eṉṟu it toḻil kaṭava
mūvarum avai muṭikkilar, piṭikkilar muṟaimai;
ēvar maṟṟavar? yōkiyar uṟu patam iḻantār;
tēvarum avaṉ tāḷ alāl aruccaṉai ceyyār.