கம்பராமாயணம் 6240 · யுத்த 3.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பண்டு வானவர் தானவர் - முன்பு, தேவர்களும் அசுரர்களும்; யாவரும் பற்றி - ஆகிய எல்லோரும் பிடித்து; தெண் திரைக் கடல் கடைதர - தெளிந்த அலைகளை உடைய பாற்கடலை (அமுதம் வேண்டி) கடைவதற்கு; வலியது தேடிக் கொண்ட மத்தினை - வலிமை வாய்ந்ததாகத்தேடி கைக்கொண்டமத்தை (மந்தரமலை), தன் கொற்ற குவவுத் தோட்கு - தனது வெற்றி மிகுந்த திரண்ட தோளுக்கு; அமைந்த தண்டு எனக் கொளலுற்று - அமைந்த தண்டாயுதம் எனக் கொண்டுபின்; அது நொய்து எனத் தவிர்ந்தான் - அது அற்பமானது என்று விட்டு விட்டான்.
பண்டு - முற்காலத்தில். தானவர் - அரக்கர். கடல் - பாற்கடல். மத்து - மந்தரமலை. குவவுத்தோள் - திரண்டு குவிந்த தோள். தண்டு - தண்டாயுதம். கொளல் உற்று - கொண்டு. நொய்து - அற்பமானது (மிகச்சிறியது).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Long ago, when gods and dānavas all took hold
- to churn the clear-waved ocean, the churning stick they had searched out for its strength,
- he meant to take as a club to suit his victorious, massive shoulders,
- but gave it up, saying, It is too flimsy.
What the poem says
When the gods and demons churned the ocean of milk for the nectar of immortality, they used Mount Mantara as the churning stick. Iraṇiyaṉ thought of taking that mountain as his mace, but rejected it as too light.